இல்லம் தோறும் தேசியக் கொடி.. இருசக்கர வாகனப் பேரணி.. மாஸ் காட்டும் மோடி அரசு..
விடுதலைப் பெருவிழாவின் அமிர்த காலத்தின் ஒரு பகுதியாக "இல்லம் தோறும் தேசியக் கொடி" இயக்கம் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை நாடு முழுவதும் கொண்டாடப்படும். இதில் மக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற ஊக்குவிக்கப் படுவார்கள். இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கம் பெருமளவில் சென்றடைவதை உறுதி செய்வதற்கும், அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் தேசியக் கொடி இருசக்கர வாகனப் பேரணி காலை 08.00 மணிக்கு புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனப் பேரணியை குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தங்கர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வடகிழக்கு பகுதி வளர்ச்சி, கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியும் கலந்து கொள்கிறார். குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்த பின்னர், இருசக்கர வாகனப் பேரணி இந்தியா நுழைவு வாயில் பகுதியை சென்றடைய உள்ளது. இப்பேரணி இந்தியா நுழைவு வாயில் பகுதியை நிறைவு செய்து, கடமைப் பாதையைக் கடந்து மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நிறைவடையும்.
விடுதலைப் பெருவிழாவின் அமிர்த காலம் என்பது ஒரு முற்போக்கான சுதந்திர இந்தியாவின் 75 புகழ்பெற்ற ஆண்டுகளை நினைவுகூரும் ஒரு தொடர்ச்சியான கொண்டாட்டமாகும். மத்திய அரசின் இந்த முன்முயற்சி சுதந்திரப் போராட்டம் மற்றும் இந்த தேசம் அடைந்த வெற்றிகள் மீது கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Input & Image courtesy: News