என் மண் என் தேசம் பிரச்சாரம்.. மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுப் பலகை..
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, தேசிய பாதுகாப்புப் படையின் பிராந்திய மையம் மற்றும் குஜராத் அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு காந்தி நகரில் அடிக்கல் நாட்டினார். முன்னதாக, 450 சங்கங்களில் ஏற்பாடு செய்திருந்த மரம் நடும் இயக்கத்தில் திரு. அமித் ஷா பங்கேற்றார். ரூ.40 கோடியில் கட்டப்பட உள்ள மான்சா-பல்வா 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார், ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட மான்சா சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார், மானசாவின் சந்திரசர் கிராமத்தில் உருவாக்கப்பட்டு வரும் குளத்தை பார்வையிட்டார்.
மோடியின் "என் மண் என் தேசம்‘’ பிரச்சாரத்தின் கீழ், தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நினைவுப் பலகையையும் அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் என்.எஸ்.ஜி இயக்குநர் ஜெனரல் எம்.ஏ.கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர், ஆகஸ்ட் 15, 2023 இன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா நிறைவடைகிறது என்று கூறினார். 1857 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் இதயங்களிலும் மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி விதைத்துள்ளார்.
தியாகிகளின் நினைவிடத்திற்கான பூமிபூஜை செய்ய மான்சாவுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றபோது, 1857 இயக்கத்தில் இந்த கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் தியாகம் செய்ததை 90 சதவீத கிராம மக்கள் அறிந்திருக்கவில்லை என்று அமித் ஷா கூறினார். சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய பல மறக்கப்பட்ட இடங்களையும் தியாகிகளையும் நினைவுகூர்வதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அழிவற்றவர்களாக மாற்றியுள்ளார் என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: News