தற்பொழுது மீண்டும் எம்.பியாக பதவி வகித்து வரும் ராகுல் காந்தி சமூகவலைத்தளங்களில் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிக்கை தற்போது இந்தியாவில் பரபரப்பு ஏற்படுத்துகிறது. குறிப்பாக சமீபத்தில் அவர் யாத்திரை பயணம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார். அது குறித்து தான் அந்த ஒரு அறிக்கை அமைந்து இருந்தது. சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், என்னுடைய வீடாக நினைக்கும் இந்த நிலப்பரப்பில் கடந்த ஆண்டு 145 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டேன்.
எதற்கு நடைபயணம் எனவும், பயணத்தில் எதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள்? எனவும் பலர் என்னிடம் கேள்வி கேட்கின்றனர். நான் மிகவும் எதை நேசிக்கிறேன் என்பதை பற்றி அறிந்து கொள்ள விரும்பினேன். குறிப்பாக இத்தனை நாட்கள் நடைபெறும் நடைப்பயணத்தை எளிதாக கடந்து விடலாம் என்று முதலில் என் இருந்தேன், போகப்போக தான் தெரிந்தது அது எவ்வளவு கடினமானது என்று. அதனால் சில நாட்களில் எனது முழங்காலில் நீண்ட நாட்களுக்கு முன்னால் ஏற்பட்ட காயத்தால் வலி அதிகமானது. எனது டாக்டருடம் எங்களுடன் வந்தார்.
யாத்திரையின் போது பல்வேறு தரப்பு மக்களை சந்தித்தேன் அப்பொழுது தான் இந்தியாவைப் பற்றி முழுமையாக நான் அறிந்து கொண்டேன். நான் நேசித்த பொருள் எது என்பது சட்டென எனக்கு விளங்கியது. அன்புக்குரிய பாரத மாதா ஒரு நிலத்தைக் குறிப்பது மட்டும் அல்ல. அது ஒவ்வொரு இந்தியரின் குரல். இந்தியா என்பது ஒரே மதம், ஒரே கலாசாரம் கொண்டது அல்ல. மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஜாதிகளும் அல்ல. அனைத்தும் கலந்தது தான் இந்தியா" என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
Input & Image courtesy: News