செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் சாதிக்கும் இந்தியா.. அடித்தளம் போட்ட அமைச்சகம்..

Update: 2023-09-02 02:34 GMT

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் குளோபல் இந்தியா செயற்கை நுண்ணறிவு 2023 ஐ நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்பார்கள். அடுத்த தலைமுறைக்கான கற்றல் மற்றும் அடிப்படை செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், சுகாதாரம், நிர்வாகம் மற்றும் அடுத்த தலைமுறைக்கான மின்சார வாகனங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், எதிர்கால செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி போக்குகள், செயற்கை நுண்ணறிவு கணினி அமைப்புகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறமைகளை வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.


மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் இந்த மாநாட்டின் வழிகாட்டுதல் குழுவுக்கு தலைமை தாங்குகிறார். குளோபல் இந்தியா செயற்கை நுண்ணறிவு 2023 இன் வரையறைகளை வடிவமைக்கும் பணி இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா செயற்கை நுண்ணறிவில் அதிக முக்கியத்துவத்தை செலுத்த வேண்டும் என்றும் அரசு தரப்பில் முழு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த மாநாடு குறித்து பேசிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் மற்றும் பல துறைகளில் அதன் தாக்கம் குறித்து விவாதிக்க உலகின் சிறந்த மற்றும் ஒளிமயமான எண்ணங்களை ஒரே அமைப்பின் கீழ் ஒன்றிணைப்பதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார். குளோபல் இந்தியா செயற்கை நுண்ணறிவு 2023 மாநாட்டை அக்டோபர் 14, 15 அன்று நடத்துவதற்கு தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News