வாட்ஸ் அப்பில் விரைவில் வரவிருக்கும் இருக்கும் ஒரு புது அம்சம்.!

Update: 2021-03-09 11:49 GMT

வாட்ஸ்அப் கடந்த ஆண்டு நவம்பரில் disappearing messages என்ற மறையும் மெசேஜ்கள் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. பெயர் குறிப்பிடுவது போல, இந்த அம்சம் தானாகவே சாட்களிலிருந்து இருந்து குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மெசேஜ்களை நீக்குகிறது. வாட்ஸ்அப் தற்போது காணாமல் போகும் செய்திகளுக்கு ஏழு நாட்களுக்கு ஒரு டைமரை அமைக்க அனுமதிக்கிறது. ஆனால் இது விரைவில் 24 மணிநேரத்தில் மறையும் செய்திகளுக்கான ஆதரவையும் சேர்க்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


 WABetaInfo படி, வாட்ஸ்அப் 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்து போகும் செய்திகளை அமைக்கும் திறனை சோதனைச் செய்து வருகிறது. இந்த அம்சம் தற்போது வளர்ச்சியில் உள்ளது. இது எல்லா வாட்ஸ்அப் உபயோகிப்பவர்களுக்கு மத்தியில் எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

குரூப் செய்திகள் மற்றும் தனிநபர் செய்திகளுக்கும் கூட வாட்ஸ்அப்பின் மறையும் செய்திகள் அம்சத்தை இயக்க முடியும். இந்த அம்சம் இயல்பாகவே இயக்கப்படாமல் தான் இருக்கும். நீங்கள் இதை இயக்க விரும்பினால் தொடர்பு / குழு தகவல் (contact/group) அமைப்பிற்கு சென்று அதை இயக்கலாம். குழு சாட்டிங்கில், அட்மின்கள் மட்டுமே காணாமல் போகும் செய்திகளைக் கட்டுப்படுத்துவார்கள். ஆனால் மற்ற தனிநபர் அரட்டைகளில் யார் வேண்டுமானாலும் அதை எப்போது வேண்டுமானாலும் இயக்கலாம் (on) / முடக்கலாம் (off).


இதற்கு முன்னதாக, Signal ஆப் அமைப்பில் இருக்கும் Read Once அம்சம் போன்ற ஒரு முறை படித்ததும் தானாகவே மெசேஜ் டெலிட் வகையில் Auto Delete என்ற அம்சத்தையும் அறிமுகம் செய்யவுள்ளதாக WABetaInfo தகவல் வெளியிட்டது. அதே போல் வெப் பதிப்பிலும், வாட்ஸ்அப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இது போன்ற அம்சம் ஏற்கனவே சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளில் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது. பய்னர்களைத் தக்கவைத்து பல புதிய அம்சங்களையும் வசதிகளையும் வாட்ஸ்அப் அவசர அவசரமாக செயல்படுத்தி வருவது தெளிவாக தெரிகிறது.

Similar News