பாஜக தலைவர்களை தரம் தாழ்த்தும் நோக்கில் செய்தி பரப்பும் சன்நியூஸ்! அப்போ உதயநிதியை எந்த லிஸ்டில் சேர்க்கப் போறாங்க?

Update: 2021-04-08 01:00 GMT

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று உற்சாகத்துடன் சொன்னார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த சன்நியூஸ், தாமரை சின்னத்தை ஆடையில் பொறித்திருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.  இந்த சின்னத்துடன் அவர் ஓட்டுப்போட வந்ததுதான் சர்ச்சையானதாக கூறி செய்தி வெளியிட்டுள்ளது.



இது மார்பிங் செய்து பகிரப்பட்ட என தெரிய வந்துள்ளது. ஒருவேளை இது உண்மையாகவே இருந்தாலும், திமுகவினர் செய்த தவறை யாரும் வெளியில் சொல்ல முன்வருவதில்லை.

உதயநிதி தனது ஆடையில் திமுக சின்னம் பொறித்து அணிந்து வந்துள்ளார். எந்த மீடியாவிலும், சமூக ஊடகத்திலும் அது குறித்து பேசப்படவில்லை.

திமுக சார்பு ஊடகங்களால் பரப்பப்படுவது மட்டுமே செய்தியாக்கப்படுகிறது. அவையே உண்மை என சொல்லி மக்கள் மனதில் நம்ப வைக்கப்படுகிறது. இந்த மாய வலையில் இருந்து மீண்டு வரும் வரையில், திமுகவினரின் சித்து விளையாட்டுகளை பார்க்க வேண்டி இருக்கும்.




 


 


Similar News