கர்ணன் படம் திரையிடப்பட்ட தியேட்டரில் வி.சி.க கட்சி கொடி - எந்த சாதி ஒழிப்பு போராளியும் இதற்கு வாய் திறக்க மாட்டாங்களே!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே இன்று திரையரங்குகளில் வெளியானது.
தமிழ் சினிமாவில் தலித் அரசியலை வெளிப்படையாக பேசிய பா.ரஞ்சித் தனது அரசியலுக்கு இசைவான படங்களையும் தயாரித்து வருகிறார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார்.
பரியேறும் பெருமாள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு அடுத்து, மாரி செல்வராஜுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக நடிகர் தனுஷை வைத்து இயக்கிய கர்ணன் படம் அமைந்தது.
இது போன்ற படங்களில் பொதுவாக வன்முறை காட்சிகளே பிரதானமாக இடம்பெறுகிறது. மாரி செல்வராஜ் இந்தப் படத்தில் கதாநாயகனை வாளெடுக்க வைத்துள்ளார்.
கர்ணன் திரைப்படம், சாதி பாகுப்பாடுகள், அதனால், ஏற்படும் வன்முறை ஆகியவற்றை பற்றியது என்றாலும், இதன் மூலமே வன்முறையை தூண்டும் அளவுக்கு சில சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
கர்ணன் படத்திற்காக திரையரங்கில் குறிப்பிட்ட கட்சி கொடிகளை வைத்து அக்கட்சி கட்சி தொண்டர்கள் கொண்டாடியுள்ளனர். ஜாதியை ஒழிக்க வேண்டுமென கூறிவிட்டு, ஜாதியை வைத்து அரசியல் செய்யும் சித்தத்தை நம்பி இன்னும் ஒரு கூட்டம் பின்னால் செல்வதை கண் கூடாக காண முடிகிறது.