ஒடிசா: புறாக்களுக்கு மாதம் ரூ.12,000 தொகையை செலவிடும் பாசக்கார சகோதரர்கள் !

3 சகோதரர்கள் சேர்ந்து 250 புறாக்களை வளர்த்து வருகின்றனர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,000 செலவும் செய்து வருகிறார்களாம்.

Update: 2021-11-12 12:45 GMT

 வீட்டில் எப்போதும் கலகலப்பான சூழல் இருக்க வேண்டும் என்றால் செல்லப் பிராணிகளை வளர்த்தால் போதும். தனியாக வீட்டில் வசிப்போருக்கு செல்லப் பிராணிகள் தான் சிறந்த துணை. அவற்றுடன் எப்போதும் மணி கணக்கில் நேரம் செலுத்துவார்கள். இன்றைய இளம் தலைமுறையினருக்கு செல்லப் பிராணிகள் வளர்க்கும் பழக்கம் கூடுதலாக உள்ளது என்று சொல்லலாம். பெரும்பாலானவர்கள் தங்களுடைய வீடுகளில் நாய், பூனை, கோழி, புறா, முயல், கிளி போன்ற வீட்டு விலங்குகளைசெல்லப் பிராணிகளாக பலர் வளர்த்து வருகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய்கள் வரை செலவு செய்வோரும் உண்டு.


இப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று தான் ஒடிசா மாநிலத்தில் நடந்து வருகிறது. 3 சகோதரர்கள் சேர்ந்து சுமார் 250 புறாக்களை வளர்த்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 வரை செலவு செய்கின்றனர். மகேஷ், சங்கர் மற்றும் ஜித்தேந்திரா சாஹு ஆகிய மூன்று பேரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் ஒடிசா மாநிலத்தில் உள்ள தெங்கனல் பகுதியில் வசித்து வருகின்றனர். புறாக்களின் மீதுள்ள அதீத பிரியத்தால் இவற்றை வளர்க்க இவர்கள் தொடங்கினர். இவர்களிடம் 15 வகையான வெவ்வேறு இன புறாக்கள் உள்ளதாம். மொத்தம் 250 புறாக்களை இவர்கள் வளர்த்து வருகிறார்கள். இந்த புறாக்கள் தான் இவர்களின் மிக நெருக்கமான செல்லப் பிராணிகள்.


இவற்றை மும்மை, சட்டிஸ்கர் மற்றும் வேறு சில இடங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கின்றனர். ஆரம்பத்தில் இந்த புறாக்களை வளர்க்க இவர்களின் வீட்டில் கடும் எதிர்ப்பு வந்ததாக 3 சகோதரர்களில் ஒருவரான சங்கர் கூறுகிறார். பிறகு சில காலம் கடந்த பின், குடும்பத்தில் உள்ள அனைவரும் புறாக்களை நேசிக்க தொடங்கி விட்டனர். புறாக்களுக்காக மாதம் ரூ.12,000 செலவு செய்வதற்கு, இவர்கள் நடத்தி வரும் டிபன் கடை உதவுகிறதாம். 1998 ஆம் ஆண்டில் இருந்தே இவர்கள் மூவரில் ஒருவரான மகேஷ் என்பவர் பறவைகளை வளர்த்து வருகிறார். தினமும் காலை உணவை சாப்பிட்ட பிறகு, புறாக்கள் அனைத்தும் விண்ணை நோக்கி பறக்க சென்று விடும். மகேஷ் எழுப்பும் ஸ்பெஷலான ஒலியை கேட்ட பின்பே இவைகள் மீண்டும் கீழே இறங்கும். இத்தகைய பாசமான விதங்களில் 3 பெயரும் புறாக்களை அக்கறையோடு பார்த்துக் கொள்கிறார்கள். 

Input & Image courtesy:News18

 


Tags:    

Similar News