பாலைவனத்தில் கட்டப்படும் ஆடம்பர வீடு: சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ!
பாலைவனத்தில் கட்டப்படும் ரூ.12.8 கோடி மதிப்பிலான ஆடம்பர வீட்டின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் ஆசை இருக்கத்தான் செய்கிறது. சிலபேருக்கு கடற்கரையின் ஓரங்களில் பீச் ஹவுஸ் வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சில பேருக்கு இயற்கை சுற்றுச்சூழல்களுக்கு இடையில் நாம் வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்த ஆசை தான் மனிதனை எங்கோ? கொண்டு செல்கிறது. அந்த காட்டில் தற்பொழுது, எல் சிமெண்டோ யூனோ என்று பெயரிடப்பட்ட ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நவீன வீடு, கலிபோர்னியாவின் ஜோசுவா ட்ரீ என்ற பாலைவனத்தின் நடுவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டில் சிறப்பம்சம் என்னவென்று கேட்கிறீர்களா? இதோ இதுதான். இந்த நவீன வீடு $ 1.75 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான விலையில் விற்பனைக்கு வருகிறது. அதாவது இந்த வீடு இந்திய மதிப்பில் ரூ.12.8 கோடி வரை இருக்குமாம்.
மொஜவே பாலைவனத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவை கொண்ட மக்கள் வசிக்காத நிலத்தில் அமைந்துள்ள இந்த தனிமைப்படுத்தப்பட்ட வீடு மட்டும் பெரிய கற்பாறைகள் மற்றும் இயற்கை புல்வெளிகளால் சூழப்பட்ட தரிசு நிலத்தின் நடுவே அமைத்துள்ளது. இயற்கையுடன் தனிமையில் வாழ விரும்பும் நபர்களுக்கு இத்தகைய வீடு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது என்ற இந்த நிறுவனம் கூறுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த வீடு RSG3D தொழில்நுட்ப கட்டிட அமைப்பைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது கான்கிரீட் மற்றும் நுரையால் செய்யப்பட்ட 3D பேனல்களை கொண்ட தொழில்நுட்பம் தான் அது. இந்த வீட்டில் ஒரு உள்ளமைக்கப்பட்ட நூலகம் மற்றும் ஒரு பிரத்யேக ரீடிங் கார்னரும், பாலைவன இரவில் வெளிச்சத்திற்காக கஸ்டம் LED விளக்குகள் ஆகியவையும் இருக்கும்.
இந்த நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது பற்றிக் கூறுகையில், "இந்த இடம் தனித்துவம் வாய்ந்தது. மேலும் இது மக்களுக்கு சிறப்பு வாய்ப்பாக அமையும். மேலும் நெருக்கமான நகரங்களில் வாழும் மக்களுக்கு இதுபோன்ற தனிமையான வீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது எப்படி இருந்தாலும் பாலைவனத்தின் நடுவே அக்கம்பக்கம் யாரும் இல்லாமல் கட்டப்படும் இந்த வீடு, பாதுகாப்பு ரீதியில் கொஞ்சம் பயத்தை அளிக்கிறது.
Input & Image courtesy:News18