அடுத்தடுத்து ஊடக வாக்கெடுப்புகள் - தி.மு.க-வை கழுவி ஊற்றும் மக்கள் - அறிவாலயம் 'ஷாக்'!

Update: 2021-11-25 13:12 GMT

ட்விட்டரில் அரசியல் பல்ஸ் தெரிந்துக்கொள்ள வாக்கெடுப்புகளை நடத்துவது இயல்பான ஒன்று. குறிப்பாக, செய்தி ஊடகங்கள் மக்களின் மனநிலையையும், எண்ண ஓட்டங்களையும் துல்லியமாக தெரிந்துக்கொள்ள இத்தகையை வாக்கெடுப்புகளை அடிக்கடி நடத்தி மக்களின் குரலாக பதிவிடுவர்.

சமீபத்தில் ஆட்சிக்கு வந்த 200 நாட்களை கொண்டாடி வருகிறது தி.மு.க அரசு. 200 நாட்கள் தி.மு.க ஆட்சி குறித்த மக்களிடம் பிரபல செய்தி நிறுவனங்கள் ட்விட்டர் வாயிலாக வாக்கெடுப்பகளை நடத்தி வருகின்றன.

இதில் வரும் முடிவுகள் அறிவாலய வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலில் News 7 தொலைகாட்சியின் வாக்கெடுப்பு. "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் முதல் 200 நாட்கள், உங்கள் மதிப்பீடு?" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலாக 0 - 25, 25 - 50, 50 - 75 மற்றும் 75 - 100 என 4 விடைகளை மக்கள் தேர்ந்தெடுக்கலாம் என 24 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.


24 மணி நேரத்தில் பதிவான 25,363 வாக்குகளில் 43% பேர் அதாவது கிட்டத்தட்ட 12,000 பேர் தி.மு.க ஆட்சி படுமோசம் என மதிப்பீடு செய்து 0 - 25 மதிப்பெண்களையே வழங்கி முதல்வரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த முடிவால் ஆடிப்போன சேனல் நிர்வாகம் வாக்கெடுப்பையே டெலிட் செய்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ளது.

அடுத்ததாக, பிரபல ஊடகமான் ஜீ ஹிந்துஸ்தான் தமிழ் நடத்திய கருத்துக்கணிப்பில் "முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் முதல் 200 நாட்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டு சாதனை, வேதனை என இரண்டு பதில்களை மக்கள் 24 மணி நேர்த்திற்குள் வாக்களிக்கலாம் என சொல்லப்பட்டு இருந்தது.

இந்த வாக்கெடுப்பிலும் தி.மு.க-வுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பதிவான 8,979 வாக்குகளில் 65.2% சதவீதம் பேர் அதாவது கிட்டத்தட்ட 5,000-க்கும் மேற்பட்டோர் வேதனை என பதிலளித்து தி.மு.க ஆட்சி மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.


அடுத்ததாக ஆதான் தமிழ் நடத்தி வரும் வாக்கெடுப்பு. "200 நாள் திமுக ஆட்சி குறித்து உங்கள் கருத்து" என கேள்வி கேட்கப்பட்டு மூன்று ஆப்ஷன்களில் பதிலளிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. அவை திருப்தியளிக்கிறது, இன்னும் அனுபவம் தேவை, திருப்தி இல்லை ஆகியவை. 

இந்த வாக்கெடுப்பிலும் தி.மு.க-வுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தற்போதைய நிலவரப்படி வாக்களித்துள்ள 4,758 மக்களின் எண்ணப்படி 84.3% பேர் அதாவது கிட்டத்தட்ட 4,000 பேருக்கு மேல் தி.மு.க ஆட்சியில் சுத்தமாக திருப்தி இல்லை என பதிலளித்துள்ளனர்.


அடுத்தடுத்து மக்கள் குரல் வாக்கெடுப்புகளில் தி.மு.க-வுக்கு எதிரான முடிவுகள் வருவதால், தி.மு.க அரசின் 200 நாட்களிலேயே அதிருப்தி தலை தூக்கியுள்ளது, எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க-வை மாநகராட்சி தேர்தல்களில் தோல்வி அடைய செய்ய வேண்டும் என தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார் பா.ஜ.க தலைவர் SG சூர்யா.

இருப்பினும், தனது அதிகார பலத்தை கொண்டு மக்கள் கருத்துக்களை வெளியிட விடாமல் ஊடகங்களை தி.மு.க அரசு அச்சுறுத்தி வருவதாக மக்கள் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் தான் நியூஸ் ௭ செய்தி சேனல் தனது வாக்கெடுப்பை டெலிட் செய்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

Tags:    

Similar News