கன்னியாகுமரியில் மதவெறியை தூண்டிவிடுகின்றனரா மதபோதகர்கள்? கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் மீது 16 வழக்குகள்!

Update: 2021-07-27 01:30 GMT

கன்னியாகுமரியில் 19வயது பெண்ணை மதபோதனை என்ற பெயரில், மதபோதகர் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தின் அதிர்ச்சி தணிவதற்குள், நாட்டுக்கு எதிராக பிரிவினைவாதம் பேசிய மற்றொரு மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த வாரம் கிறிஸ்தவ இஸ்லாமிய இயக்கம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பனைவிளை பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா, பாரதமாதா, இந்துமதம் , மத்திய, மாநில அரசுகள் குறித்து இழிவுபடுத்தி பேசியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து அவர்மீது சட்டவிரோதமாக கூடுதல் , இரண்டு ஜாதி , இரண்டுதரப்பு, இரண்டு மதம் இடையே விரோதத்தை உருவாக்குதல், பொதுஅமைதிக்கு பங்கம் வகுத்துதல் ,மதநம்பிகளை அவதூறுபரப்புதல்,என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாதிரியா ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அந்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் முதல் குற்றவாளியுமான அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளரான ஸ்டீபன் கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்றார்.

இவரை தனிப்படை போலீசார் காரோடு பகுதியில் வைத்து கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளது. விரைவில் குண்டர் சட்டம் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News