கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற 2 வயது சிறுவன்!

ஒடிசாவை சேர்ந்த 2 வயது சிறுவன் கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனையை படைத்துள்ளார்.

Update: 2021-10-06 13:45 GMT

குழந்தைகள் நாம் கற்பிக்கும் ஒன்றே அவர்கள் வேகமாக புரிந்து கொள்வார்கள். அந்த வகையில் ஒடிசாவை சேர்ந்த சுபாம் என்ற புனைப்பெயரில் கொண்ட மிருத்யுஞ்சய் நாயக் என்ற சிறுவன் தற்பொழுது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார். வெறும் இரண்டு வயதாகும் இவர் கலாம் உலக புத்தக சாதனையையும் படைத்துள்ளார். சில நொடிகளில் பல நாடுகள், யூனியன் பிரதேசங்கள், தலைநகரங்கள், நகரங்கள் மற்றும் கண்டங்களை பெயர்களை சரியாக சொல்லும் திறமையை மிருத்யுஞ்சய் பெற்றுள்ளார். அவர் தனது கூர்மையான நினைவாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணமாக இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். 


அவரது தனித்துவமான திறமையை ஏராளமானோர் பாராட்டியுள்ளனர். இந்த ஒரு செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. குறிப்பாக 2 வயது இந்தச் சிறுவனின் நினைவாற்றல் பலரை வியப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. பொது அறிவு தகவல்களில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி, ஸ்லோகம் மற்றும் மந்திரங்களை சரளமாக ஓதுவதிலும் வல்லவராக இருக்கிறார். இதுகுறித்து சிறுவனின் தந்தை பிரதாப் நாயக் கூறுகையில், "ஊரடங்கின் போது வீட்டில் அனைவரும் ஒன்றாக இருந்தபோது அவனது திறமையை நாங்கள் கவனித்தோம். எனது மகனிற்கு கூர்மையான நினைவாற்றல் இருப்பதை கவனித்த நாங்கள், அதற்கேற்ற பொது அறிவு தகவல்களை கற்றுக்கொடுத்து அவனை ஊக்குவிக்கவும் செய்தோம். நாங்கள் கற்றுக்கொடுப்பதை கவனித்து பின்னர் தன்னிச்சையாக அவரே அதனை கூறுவான்" என்று அவர் கூறினார். 


மேலும் இந்த கற்பிக்கும் பணியில் சுபாமின் தாய் தீபாஞ்சலி நாயகும் முக்கிய பங்காற்றி வருகிறார். கலாம் உலக சாதனை புத்தகத்தில் ஒடிசாவிலிருந்து ஐந்து வயதுக்குட்பட்ட வயதினருக்கு நடந்த போட்டியில் சுபாம் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அவர் தற்போது ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்டில் இடப்பெற பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.   

Input & Image courtesy:News 18



Tags:    

Similar News