மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், சந்திரயான் -3 திட்டம் இந்தியாவுக்கான பரந்த சர்வதேச ஒத்துழைப்பை ஈர்க்கிறது என்று கூறினார் . தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் தர்சானந்த் தீபக் பால்கோபின் தலைமையிலான உயர்மட்ட மொரீஷியஸ் தூதுக்குழு புது தில்லியில் அவரைச் சந்தித்து இந்தியா-மொரீஷியஸ் கூட்டு செயற்கைக்கோளுக்கான முன்மொழிவு குறித்து விவாதித்த பின்னர் அமைச்சர் பேசினார் .
மொரீஷியஸில் உள்ள இஸ்ரோவின் தரை நிலையத்தை மூன்றாம் தரப்பு பணிகளுக்கு ஆதரவளிக்க பயன்படுத்த இந்தியாவும் மொரீஷியஸும் ஒப்புக் கொண்டுள்ளன . பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க பயணத்தின் போது ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம், விண்வெளித் துறையில் உலகின் பிற நாடுகளுடன் சம பங்காளியாக ஒத்துழைப்பதற்கான தனது திறனை இந்தியா நிரூபித்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
கடந்த 17-ம் தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தளங்களை பால்கோபின் பார்வையிட்டார். முன்மொழியப்பட்ட இந்தியா - மொரீஷியஸ் கூட்டு செயற்கைக்கோளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் பயன்பாட்டு திறன்களை இஸ்ரோ, அமைச்சரிடம் சமர்ப்பித்தது.
Input & Image courtesy: News