மனிதர்களைப் போல கடலில் விளையாடும் பறவைகள்: IAS அதிகாரி பகிர்ந்த வீடியோ !

தற்பொழுது IAS அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

Update: 2021-12-04 14:18 GMT

குழந்தைத் தனம் என்பது மனிதர்களிடத்தில் கண்டறிதல் அழகு. அதுவும் பறவைகள் இடத்தில் அவற்றை கண்டால் பேரழகு இதனை இந்திய IAS அதிகாரி ஒருவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மனிதர்களிடம் குழந்தை தனத்தை பார்க்கமுடியும். குறிப்பாக அவர்கள் கடற்கரைக்கு செல்லும் பொழுது குழந்தைகளாகவே மாறுகிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு மட்டும் பொருந்துமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. விலங்குகளும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும். பறவைகள் சில கூட்டமாக இருந்து கொண்டு கடற்கரை அலைகளோடு விளையாடி மகிழும் காட்சி ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. இந்திய IAS அதிகாரி M. V. ராவ் தனது ட்விட்டரில் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். 


அதில், கடலில் அலைகள் வரும் போது பறவைகள் பின்னோக்கி ஓடுவதும், அலைகள் கடலின் உள்ளே செல்லும் போது பறவைகள் அலைகளை துரத்துவது போலவும் கூட்டமாக இருந்து கொண்டு விளையாடி மகிழ்கின்றது. இந்த வீடியோவின் தலைப்பில் இந்திய IAS அதிகாரி M. V. ராவ் பதிவிட்டுள்ள பதிவில், விளையாடும் குழந்தைகள், உன்னால் முடிந்தால் என்னை பிடி என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் இதை போன்று இயற்கையின் படைப்பில் உள்ள அதிசய வீடியோ ஒன்றையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பார்ப்பதற்கு மரத்தில் நன்கு வளர்ந் த செழித்த இலை ஒன்று நாளடைவில் உதிர்ந்து கீழே விழுந்து கிடப்பது போல் தோன்றுகின்றது. ஆனால் உண்மையில் அது மரத்தின் இலை கிடையாது அது ஒரு வண்ணத்துப்பூச்சி. இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் அதற்குரிய அழகான செயல்களில் ஈடுபடும் பொழுது மனிதர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. 

Input & Image courtesy:News18




Tags:    

Similar News