ஒரே இடத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான காகங்கள்: இயற்கை பேரழிவுக்கான அறிகுறியாக இருக்குமா?

ஒரே இடத்தில் சுமார் ஆயிரக்கணக்கான காகங்கள் ஒரு தீவில் ஒன்று கூடி இருக்கிறது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்த இருக்கிறது.

Update: 2023-02-17 03:18 GMT

இயற்கை பேரழிவுகள் ஏற்படும் பொழுது எப்பொழுதும் மனித இனத்தின் அழிவு அறிகுறிகளை விலங்குகள் மற்றும் பிராணிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். குறிப்பாக நிலநடுக்கம் ஏற்படும் போகிறது அல்லது அசம்பாவிதம் ஏற்படப்போகிறது என்றால் பறவைகள், விலங்குகள் தான் அந்த இடத்தில் இருந்து முதலில் தன்னை தற்காத்துக் கொள்ள வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து போகும். அந்த வகையில் தற்பொழுது ஆயிரக்கணக்கான காக்கைகள் தற்பொழுது ஒரு தீவில் கூடி இருக்கிறது.


ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹென்சு என்ற ஒரு தீவில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு தான் தற்பொழுது அரங்கேறி இருக்கிறது. இங்கு எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் கார்கள் என அனைத்து விதமான பொருட்களின் மீதும் காகங்கள் கூட்டமாக அமர்ந்திருப்பது காணப்படுகிறது.அத்தோடு வானத்திலும் காகங்கள் கூட்டம் கூட்டமாக வந்தது. இதை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். குறிப்பாக இந்த தீவில் முழுவதுமாக காகங்கள் சூழ்ந்திருக்கும் வீடியோ கூட சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரல் ஆகியது.


இந்த விசித்திர நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் சரியாக என்னவென்று தெரியவில்லை. அதேசமயம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளை இவை சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். துருக்கியில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பறவைகள் ஒலி எழுப்பு எழுப்பியபடி கூட்டம் கூட்டமாக வானத்தில் பறந்து சென்ற வீடியோவும் அப்பொழுது வைரலானது அந்த வகையில் முன்னெச்சரிக்கை மணியாக இருக்குமோ என்று ஒரு சந்தேகமும் எழும்பி இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News