ரஷ்யா-உக்ரைன் போர்: உயிரிழப்புகள் எண்ணிக்கையை மறைக்கிறதா ரஷ்யா?
1,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும் உக்ரைன் ராணுவம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக தற்போது தலைப்புச் செய்திகளில் எல்லாம் முதல் இடத்தைப் பெற்றும், ரஷ்ய அரசாங்கம் இந்தப் போர் நடவடிக்கையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பற்றி இதுவரை தனது அதிகாரப்பூர்வமான எதுவும் வெளியிடப்படவில்லை. நேற்று உக்ரேனிய இராணுவம் 1,000 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியதாக கூறியுள்ளது. இதற்கிடையில், உக்ரைனில் உள்ள 211 இராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை அதன் ரஷ்ய ராணுவம் முறியடித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உக்ரைனின் கார்கிவ் நகரின் பல உயிர்களையும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் கடுமையான சண்டைக்கு மத்தியில் 1,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்றதாக உக்ரைன் இராணுவம் சனிக்கிழமை அதிகாலை தெரிவித்தது. எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ரஷ்ய ராணுவம் இதுவரை வெளியிடவில்லை. எனவே ரஷ்யா இது பற்றி எந்த தகவலும் கூறாதது உலக நாடுகளுக்கு மத்தியில் விஷயத்தை மறைக்கிறதா? என்பது குறித்த கேள்வியும் எழுகிறது. இதேவேளை, தொடரும் ரஷ்ய படையெடுப்பில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 102 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உக்ரைன் குறைந்தது 80 டாங்கிகள், 516 கவச போர் வாகனங்கள், ஏழு ஹெலிகாப்டர்கள், 10 விமானங்கள் மற்றும் 20 க்ரூஸ் ஏவுகணைகளை அழித்துள்ளதாகவும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைனில் உள்ள 211 இராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை அதன் வீரர்கள் தகர்த்துவிட்டதாகக் கூறியது. முக்கிய கிய்வ் அவென்யூவில் அமைந்துள்ள இராணுவ தளத்தை ரஷ்ய நாடு தாக்கியதாகவும் ஆனால் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் உக்ரேனிய இராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யா "கிய்வில் உள்ள விக்டரி அவென்யூவில் உள்ள இராணுவப் பிரிவுகளில் ஒன்றைத் தாக்கியது. தாக்குதல் முறியடிக்கப்பட்டது" என்று உக்ரைனின் இராணுவம் தெரிவித்துள்ளது.
Input & Image courtesy: India Today