நுபுர் சர்மா ஆதரவாளர்களுக்கு எதிராக போராட்டம்: 200 நபர்கள் மீது வழக்கு பதிவு?

நுபுர் சர்மாவின் ஆதரவாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட நபர்களின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-06-16 01:41 GMT

மகாராஷ்டிராவில் நுபுர் சர்மாவின் ஆதரவாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்டோர் மீது பிவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்திய காரணத்திற்காக முஸ்லிம் நபர்களால் மற்றும் இஸ்லாமியத்தை நேசிப்பவர்கள் அவர் தாக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நபர் பெயர் சாத் அன்சாரி. முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக சமீபத்தில் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி நுபுர் ஷர்மாவின் ஆதரவாளர்களுக்கு எதிராக சட்ட விரோதமாக கூடியிருந்ததாக 200க்கும் மேற்பட்டோர் மீது பிவாண்டி போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.


ஜூன் 12 அன்று, மகாராஷ்டிராவில் உள்ள பிவாண்டி நகரில் ஒரு இடத்தில் பலர் கூடினர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பல்வேறு நபர்கள் அவருக்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் கிளம்பி போராட்டங்களை ஆங்காங்கே நடத்தி வருகிறார்கள். அவர்களில் சிலர் முகேஷ் பாபுராம் சவான் மற்றும் சாத் அன்சாரி ஆகிய இரு நபர்களின் வீடுகளுக்கும் அணிவகுத்துச் சென்றனர். மேலும் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் அவர்களின் பதிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். போராட்டக்காரர்களில் சிலர் அன்சாரியையும் தாக்கியதாகக் கூறப்பட்டது, சவானும் அன்சாரியும் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் சூழ்நிலையை இந்த ஒரு சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. 


ஜூன் 13 அன்று, பிவாண்டியில் உள்ள போய்வாடா காவல்துறை 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது மற்றும் நார்போலி போலீஸார் கிட்டத்தட்ட 65 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 141,143, 504 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஜூன் 12 அன்று நகரத்தில் ஏற்பட்ட பதற்றத்திற்குப் பிறகு, பிவாண்டியின் மண்டலம் துணைக் காவல் ஆணையர் யோகேஷ் சவான் குடிமக்களுக்கு வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க காவல்துறைக்கு உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தார். ஒருவர் ஒரு சமூகத்திற்கு ஆதரவாக எதிராக செயல்படுவது அவருடைய சொந்த விருப்பம் எனவே இதற்காக சமூக வலைதளங்களில் அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட கருத்துகளை பதிவிட்டு கொள்ள வேண்டாம் என்று போலீசார் தரப்பில் தெரிய வந்துள்ளது. 

Input & Image courtesy: Swarajya News

Tags:    

Similar News