2025 ஆண்டிற்குள் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி 1.80 லட்சம் கோடியை எட்டும் - கெத்து காட்டும் ராஜ்நாத் சிங்
2025 ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூபாய் 1.80 லட்சம் கோடியை எட்டும் என்று ராஜ்நாத் சிங் நம்பிக்கை.
குஜராத் மாநில தலைநகர் காந்தி நகரில் பாதுகாப்பு தளவாடக் கண்காட்சி நடந்து வருகிறது. அதில் பாதுகாப்புத் துறையில் உற்பத்தி செய்யுங்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில் தனியார் துறையினர் இந்த இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் முதலீடு செய்ய முன் வரவேண்டும். அவர்கள் என்ன பிரச்சினையாக இருந்தாலும் அவை கலைய எத்தனையோ ராணுவ அமைச்சகம் அதிகாரிகளோ தயக்கம் இன்றி சந்திக்கலாம்.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு துறையுடன் கைகோர்ந்து செயல்படுகிறது. இது பாதுகாப்பு துறைக்கு ஒரு பொற்காலம். தற்போது உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி தளவாட பன்னிரண்டு பில்லியன் டாலராக உள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் இதனை 22 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் இலக்கையும் தாண்ட கூடும் பாதுகாப்பு துறையில் வாய்ப்புகளுக்கு பஞ்சம் இல்லை இத்துறையில் உலகத்தின் தேவை பூர்த்தி செய்வதை நோக்கி இந்தியா நடை போடுகிறது.
பாதுகாப்பில் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம். முன்பெல்லாம் இத்துறை தனியாருக்கு கதவு திறந்து விடப்படவில்லை முதலீட்டாளர்கள் யாராவது ஓடிவிர்களோ என்ற பயத்தில் இருக்கிறார்கள். ஆனால் இப்போது அந்த பயம் இல்லை எங்கள் கதவுகள் முதலீட்டாளர்களுக்கு திறந்து இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உற்பத்தி தளபாடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று அவர் கூறுகிறார்.
Input & Image courtesy: Dinamani