2700 ஆண்டுகள் பழமையான கழிப்பறை ! ஜெருசலேமில் கண்டுபிடிப்பு !

2700 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான மக்களால் பயன்படுத்தப் பட்ட கழிப்பறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-10 13:09 GMT

கிறிஸ்துவர்களின் அதிகமாக இருக்கும் நகரங்களில் ஒன்றான ஜெருசலேமில் 2,700 ஆண்டுகள் முந்தைய அரிய பழங்கால தனிநபர் கழிப்பறையை இஸ்ரேலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறிப்பாக மிகப்பெரிய பிரம்மாண்ட மாளிகையின் ஒரு பகுதியாக இருந்துள்ள அந்த டாய்லெட்டுக் கீழே செப்டிக் டேங்கும் அமைக்கப்பட்டிருப்பது ஆய்வாளர்களின் தொல்பொருள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முன்பே ஆடம்பர மக்களால் நவீன டாய்லெட் போன்று பயன்படுத்தப்படும் டாய்லெட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது. 


இந்த ஆய்வில் ஈடுபட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் இயக்குநர் யகோவ் பில்லிக் இதுபற்றி கூறுகையில், "தனிநபர் கழிவறை என்பது பழங்காலங்களில் மிகவும் அரிதினும் அரிதான ஒன்று. பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில தனிநபர் கழிப்பறைகளில் ஒன்றாக இது, அரசர்கள் மற்றும் மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே இதுபோன்ற தனிநபர் கழிவறைகளை வைத்திருந்திருக்க முடியும்" என்று தெரிவித்தார். "இஸ்ரேல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏற்கனவே பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டது. 


அக்கால செல்வந்தர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதற்கான முக்கிய சான்றாக இந்த தனிநபர் கழிப்பறை இருந்துள்ளது. செல்வந்தர்கள், அரச பரம்பரையினர் மட்டுமே தனிநபர் கழிப்பறை பயன்படுத்தியிருந்தாலும், அரிதினும், அரிதாக மட்டுமே இதுபோன்ற கண்டுபிடிப்புகள் இதுவரை இருந்திருக்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரை பல அரிய வரலாற்று தகவல்களை கொண்ட இடமாக இருந்து வருகிறது. அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, பண்பாட்டு முறை, உலகின் மற்றப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் குழுக்களுடன் ஒத்துப்போகிறது. 

Input & Image courtesy:CNN news

 


Tags:    

Similar News