4,500 ஆண்டுகள் மிகப்பழமையான சூரிய கோயில் எகிப்தில் கண்டுபிடிப்பு !
4500 ஆண்டுகளுக்கு பழமையான சூரிய கோயில் தற்போது எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பல்வேறு இடங்களில் தொல்லியல் துறையின் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. மிக பழமையான நாகரீகம் என்று எகிப்திய நாகரீகத்தை ஆய்வாளர்கள் கூறுவார்கள். அங்கு ஏராளமான தொன்மையான பொருட்களும், அதற்கான சுவடுகளும் அதிக அளவில் கிடைத்து வருகிறது. பல ஆண்டுகளாக செய்த ஆராய்ச்சியில் எகிப்தில் சூரிய கோவில் இருப்பதை கண்டுபிடித்து உள்ளார்கள். இந்த வகை சூரிய கோவில்கள் பார்வோன் நியூசெர் இனியால் என்கிற எகிப்திய மன்னனின் ஆட்சியில் கட்டப்பட்டவை. எனவே இவற்றை பாரா 'சூரிய கோவில்' என்றே அழைக்கின்றனர்.
மொத்தம் 6 சூரிய கோவில்கள் இருப்பதாக ஆய்வுகளின்படி தெரிகிறது? ஆனால் இதுவரை 2 சூரிய கோவில்களை மட்டுமே கண்டிபிடித்து இருந்தனர். தற்போது மூன்றாவது சூரிய கோவிலையும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த சூரிய கோவில் சுமார் 4500 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த சூரிய கோவிலை கி.மு. 25 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்தபோது பார்வோன் நியூசெர் இனியால் மன்னரால் கட்டப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். இந்த கோவிலை கண்டுபிடித்த இடத்தில் மேலும் சில ஆய்வுகளை செய்து வருகின்றனர். இதற்கடியில் வேறு சில தொல்லியல் சார்ந்த தடயங்கள் கிடைக்கலாம் என எதிர் பார்க்கின்றனர்.
இந்த மூன்றாவது சூரிய கோவிலில் பெரிய நுழைவாயில் உள்ளது. எனவே இதற்கடுத்த இடத்தில் இன்னொரு சூரிய கோவில் இருக்க வாய்ப்புள்ளது என்று இதை ஆய்வு செய்த தொல்லியல் நிபுணரான டாக்டர். மாசிமிலியானோ நஸோலோ தெரிவித்துள்ளார். இவர் எகிப்திய அகழ்வாராய்ச்சி பற்றிய துறையில் துணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் அகழ்வாராய்ச்சி செய்த போது அங்கு சில மண்பாண்டங்கள், ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டது. மேலும் கிடைத்த தடயங்களை வைத்து பார்க்கும் போது இங்கு நிச்சயம் இன்னொரு சூரிய கோவில் இருக்கும் என நஸோலோ கூறுகிறார்.
Input & Image courtesy:News18