50 கோடியைத் தாண்டிய ஜன்தன் கணக்கு.. அரசின் செயல்பாட்டை பாராட்டிய பிரதமர்..
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பிறகு நேரடியாக மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில் முக்கியமான திட்டமான பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் 2023 ஆகஸ்ட் 9, நிலவரப்படி மொத்த ஜன்தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. இவற்றில் 56 சதவீத கணக்குகள் பெண்களின் கணக்குகளாகும். 67 சதவீத கணக்குகள் கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரப்பகுதிகளிலும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகளில் வைப்புத் தொகை ரூ. 2.03 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இந்த கணக்குகளுக்கு சுமார் 34 கோடி ரூபே அட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
ஜன்தன் கணக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஜன்தன் கணக்கு 50 கோடியைத் தாண்டிய உள்ளது. ஜன்தன் கணக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது. இந்தக் கணக்குகளில் பாதிக்கும் அதிகமானவை நமது மகளிர் சக்திக்கு சொந்தமானவை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் மோடி கூறினார்.
PIB இந்தியாவின் ட்விட்டருக்குப் பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது, "இது ஒரு முக்கியமான முன்னேற்றம். இவற்றில் பாதிக்கும் அதிகமான கணக்குகள் நமது மகளிர் சக்திக்கு சொந்தமானவை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் 67% கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதால், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரப் பயன்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
Input & Image courtesy: News