ஆறு வயது பையன் தந்தையுடன் போட்ட ஒப்பந்தம்: வைரலாகும் ஒப்பந்த கடிதம்!

6 வயது சிறுவன் தன்னுடைய To-do list அட்டவணையை முழுவதுமாக கடைபிடித்தால் வெகுமதியாக 100 ரூபாய் தரப்படும் என்பது ஒப்பந்தம்.

Update: 2022-02-07 13:51 GMT

ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கை சிலரிடம் ஏதாவது ஒரு தருணத்தில் ஒப்பந்தத்தில் ஈடுபடுவார்கள். நீங்கள் இதை செய்தால் கட்டாயம், நான் இதைச் செய்வேன் என்று எழுத்துபூர்வமாக நீங்கள் ஒருமுறை எழுதிக் கொடுப்பதை தான் ஒப்பந்தம் என்று கூறவோம். அந்த வகையில் தற்போது 6 வயது சிறுவன் தன்னுடைய To-do list அட்டவணையை முழுவதுமாக கடைபிடித்தால் அவனுக்கு தந்தை வெகுமதியாக 100 தருவார் என்பது தான் அந்த ஒப்பந்தம் மகன் தன்னுடைய கைப்பட எழுதி இருக்கும் இந்த ஒப்பந்தப்படி தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.  


சிறு குழந்தைகள் இதையடுத்து எப்பொழுதும் வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால் சில சமயங்களில் அவர்கள் செய்யும் சில வித்தியாசமான செயல்கள் கூட அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அந்த வகையில் தற்போது இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய ஹைலைட், நாள்முழுவதும் எதற்கும் அழக்கூடாது கோபப்படக் கூடாது என்பதுதான். அந்தச் சிறுவன் வெற்றிகரமாக செய்து முடித்தால் சிறுவனின் தந்தை அவனுக்கு வெகுமதியாக 100 ரூபாய் வழங்குவதாக கூறியிருக்கிறார். 


அபீர் என்ற ஆறு வயது சிறுவன், தன்னுடைய தந்தையுடன் ஒரு நாளில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும்? நடந்து கொள்ளக் கூடாது? என்பதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அந்த ஒப்பந்தத்தில் தினமும் அலாரம் அடிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகவே எழுந்து விடவேண்டும் என்பதும் முக்கியமான விஷயமாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளை கையாள்வதற்காக வித்தியாசமாக இவருடைய தந்தை எடுத்துள்ள இந்த முடிவால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News