தன் பாக்கெட் மணியின் மூலம் ஒரு வீட்டையே வாங்கிய 6 வயது சிறுமி !
நோய்தொற்று காலத்தில் தான் சேமித்த பாக்கெட் மணி மூலம் சொந்த வீட்டை வாங்கிய சிறுமி.
நோய்தொற்று காலத்தில் வீடுகளில் இருக்கும் சிறுவர், சிறுமியர்களுக்கு பல்வேறு பழக்கங்களை பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போது காலகட்டங்களில் தேவையான மிக முக்கியமான பழக்கமான சேமிப்பு பழக்கம் குழந்தைகளிடம் மிகவும் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் அனைத்து குழந்தைகளும் தன்னிடம் கொடுக்கப்படும் பணத்தை உண்டியலில் சேமித்து வைத்து, சிறிது காலம் கழித்து அந்த பணத்தை தனக்கு தேவையான பொருட்களை வாங்க வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்பொழுது இந்த பழக்கம் மெல்லமெல்ல குழந்தைகளிடம் இருந்து மறைந்து வருகிறது.
அதற்கு விதிவிலக்காக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஆறு வயது சிறுமி தன்னுடைய பாக்கெட் மணி மூலமாக ஒரு சொந்த வீட்டைப் வாங்கி இருக்கும் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆம் இது உண்மைதான் இவர் நோய்தொற்று காலங்களில் இவருடைய தந்தையின் அறிவுரையின் மூலம் தன் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்க தொடங்கி இருக்கிறார். இந்தக் குழந்தையின் தந்தை பெயர் கேம் மெக்லெலன், மேலும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். தன் தந்தை மற்றும் சகோதரர்களின் உதவியுடன் சேமிப்பு பழக்கத்தை தொடங்கியிருக்கிறார்.
அதற்காக தங்களுடைய வீடுகளில் வீட்டு வேலைகளையும் செய்து, ஓய்வு நேரங்களில் மற்றவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்துள்ளார்சுமார. அதன் மூலம் கிடைத்த பணம் இந்திய மதிப்பில் சுமார் 4.5 லட்சம் ரூபாயை பாக்கெட் மணியாக இவர் சேமித்து உள்ளார். பிறகு இரண்டு சகோதரர்கள் மற்றும் தந்தையின் முதலீட்டின் பெயரில் மொத்தமாக 6 இலட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டையும் இவர்கள் வாங்கியுள்ளார்கள். எனவே சிறு வயதில் குழந்தைகளிடமும் சேமிப்பு பழக்கத்தை கொண்டுவந்தால் அது வருங்காலத்தில் மிகப்பெரிய முதலீடாக மாறும் என்பதில் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
Input & Image courtesy: News 18