மத்திய அரசு விரும்புவது காகிதமற்ற கோர்ட்டுகளை தான்: 65 பழைய சட்டங்களை நீக்க மசோதா!
நடைமுறையில் இருக்கும் 55 பழமையான சட்டங்களை நீக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் தகவல்.;
கோவா மாநில தலைநகரில் நடைபெற்ற காமன்வெல்த் சட்ட மாநாடு சிறப்பாக தொடங்கியது. இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் அவர்கள் பங்கேற்று இருந்தார். குறிப்பாக அவர் இது பற்றி கூறுகையில், இன்று நாட்டில் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நலன்களை மத்திய அரசு திட்டங்களாக கொடுத்து இருக்கிறது. ஒவ்வொரு தனி நபரின் குரலையும் கேட்பது முக்கியம், சாமானியர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க மோடி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மக்களுக்காக தான் சட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.
சட்டங்களை மக்களுக்கு தடை கற்களாக மாறும் பொழுது அவற்றை பின்பற்றுவது மக்களிடையே பெரும் சுமையாக இருக்கும். அப்பொழுது அத்தகைய சட்டங்களை நீக்கப்பட வேண்டும். அந்த வகையில் கடந்த எட்டு அரை ஆண்டுகளில் 1486 பழமையான சட்டங்கள் மற்றும் நடைமுறைக்கு பொருந்தாத சட்டங்களை நீக்கி இருக்கிறோம். 13ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்துறை இரண்டாவது பகுதிகளில் 65 சட்டங்களை நீக்க மசோதாக்கள் செய்து இருக்கிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்.
நாட்டில் உள்ள நீதிமன்றம் முழுவதும் தற்பொழுது 4 கோடி 98 வழக்குகள் நிலுவையில் தான் இருக்கின்றன. அவற்றை குறைப்பது எளிதல்ல, முடிவுக்கு வரும் வழக்குகளை விட அவற்றை எதிர்த்து தொடங்கும் புதிதாக இரண்டு வழக்குகள் வந்து விடுகிறது. எனவே ஒரு நீதிபதி சராசரியாக ஒரு நாளைக்கு 60 வழக்குகளை திருத்து வைக்கிறார். இத்தகைய நிலமைகளை சமாளிக்க தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது. மத்திய அரசின் தற்போதைய இலக்கு காகிதம் அற்ற கோர்ட்டுகளை தான் என்று அவர் கூறுகிறார்.
Input & Image courtesy: News