அமிர்தகாலம் இளைய தலைமுறையினருக்கு பொற்காலம்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பெருமிதம்!
அமிர்தகாலம் இளைய தலைமுறையினருக்கு பொற்காலம் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பெருமிதம்.
நாடு தழுவிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் மத்திய அரசு துறைகளில் பல்வேறு நிறுவனங்களில் புதிதாக சேரவுள்ள 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று வழங்கினார். இதன் ஒரு பகுதியாக போபாலில் வருமான வரித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேலைவாய்ப்பு முகாமில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடு என்று கூறினார். கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக அளவிலான இளைஞர்களுக்கு பாதுகாப்பான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அரசுத்துறைகளில் மட்டுமில்லாமல் தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.
தற்போது இந்தியாவில் நம்பக அளவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். இன்றைய தலைமுறையினருக்கு இந்த அமிர்தகாலம் பொற்காலம் என்று கூறிய அவர், 100-வது விடுதலைப் பெருவிழாவை நாடு கொண்டாடும் போது புதிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்று கூறினார்.
Input & Image courtesy: PIB