சமூக வலைத் தளத்தில் அதிகமாக தேடப்பட்ட ஒன்று: 75வது சுதந்திர தினத்தின் சிறப்பம்சங்கள் !

ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதைப் பற்றி மக்கள் அதிகமாக சமூக ஊடகங்களின் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Update: 2021-08-13 13:39 GMT

இந்த ஆண்டு இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை பற்றி பல்வேறு மக்கள் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தெரிந்துகொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே இந்திய மக்களால் அதிகமாக தேடப்பட்ட ஒரு விஷயமாக இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தின் சிறப்பு அம்சம் இடம்பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, செங்கோட்டையில் மூவர்ணக் கொடி, பிரதமர் அவர்களின் மூலம் ஏற்றப்படும். 


குறிப்பாக, ஆகஸ்ட் 15, 1947 அன்று பிரிட்டிஷ் பேரரசின் அடக்குமுறை ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்த நாள் நாடு முழுவதும் மிகவும் உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. நமது சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் தியாகங்களை நினைவுகூர அனைத்து இந்தியர்களும் இங்கு நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 தேசியக் கொடியை ஏற்றி, தேசிய கீதம் பாடி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.


அன்னியர்கள் ஆகிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் 1619 இல் குஜராத், சூரத்தில் உள்ள கிழக்கிந்திய கம்பெனி என்ற வர்த்தக நிறுவனம் மூலம் இந்தியாவில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தது. கிழக்கிந்திய நிறுவனம் துறைமுக நகரத்தில் வர்த்தக நிலையங்களை அமைத்தது. 1757 கிழக்கிந்திய கம்பெனி பிளாசி போரில் வெற்றி பெற்ற பிறகு தேசத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக கைப்பற்றியது பிரிட்டிஷ் அரசாங்கம். பிரிட்டிஷ் பேரரசு கிழக்கிந்திய கம்பெனி மூலம் 150 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தது. அவர்களின் ஆட்சி அடக்குமுறை மற்றும் கொடூரமாக வளர்ந்து. இவற்றை அடக்கும் விதமாக இந்தியாவில் சிறந்த தலைவர்கள் தோன்றி சுதந்திரத்திற்காக போராட முயன்றனர். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பகத் சிங் போன்ற தலைவர்களும் சுதந்திர போராட்ட வீரர்களும் நாடு முழுவதும் சுதந்திர போராட்டத்தை அறிவித்தனர். வெள்ளையனே வெளியேறு இயக்கம், பிரிட்டிஷார் நாட்டை விட்டு வெளியேறி, 1947 ல் அனைத்து அதிகாரங்களையும் இந்திய குடிமக்களுக்கு மாற்றியது.



இந்த தேதி எப்படி உருவானது? ஜூலை 14, 1947 அன்று, இந்திய சுதந்திர மசோதா முதன்முதலில் பிரிட்டிஷ் மாளிகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 15, 1947 இல் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவுக்கு மசோதா வழங்கப்பட்டது. இந்த மசோதா பதினைந்து நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 15, 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆகஸ்ட் 15 முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.  

Input:  https://www.ndtv.com/india-news/independence-day-2021-history-and-significance-of-august-15-2508165

Image courtesy:NDTV news


Tags:    

Similar News