தன் செல்லப் பிராணிக்காக 2 அடுக்குமாடி குடியிருப்பு: தம்பதியின் வைரல் வீடியோ !

செல்லப் பிராணி நாய்க்காக இரண்டு மாடி குடியிருப்பை ஏற்படுத்திய தம்பதியின் வைரல் வீடியோ.

Update: 2021-12-15 13:33 GMT

செல்லப்பிராணிகளை பிரியமாக வளர்க்கும் பலரும் அதற்காக பல்வேறு செலவுகளை செய்கிறார்கள். குறிப்பாக அந்தப் பிராணிகளுக்கென தன்னுடைய வருமானத்தில் பாதி தொகையை செலவிடுகிறார்கள். எனவே அவர்கள் அத்தகைய பிராணிகளுக்கு செலவிடும் விஷயங்களை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு தம்பதி தங்கள் ஆசை நாய்க்காக வீடு ஒன்றை கட்டியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாங்கள் வளர்த்து வரும் கோல்டன் ரெட்ரீவர் வகை நாயை மிகவும் நேசிக்கும் ஒரு தம்பதி அதற்காக 2 மாடி வீட்டை கட்டி உள்ளனர்.


தங்கள் நாய்க்காக கட்டியுள்ள வீடு குறித்து அந்த தம்பதியினர் தற்பொழுது TikTok-ல் ஷேர் செய்து உள்ளனர். இந்த தம்பதியினர் தங்களுடைய செல்ல கோல்டன் ரெட்ரீவருக்காக கட்டியுள்ள இரட்டை மாடி வீட்டிற்குள், அதற்கான தனிப்பட்ட இடம் மற்றும் ஒரு TV செட் உள்ளது. இந்த வீட்டில் அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. தனி TV, தனி படுக்கை, ஃபிரிட்ஜ், தனி சோஃபா மற்றும் பல இதில் அடங்கும். மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த வீட்டில் அமைந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


அதுமட்டுமின்றி ஃபிரிட்ஜில் அதற்கு தேவையான உணவுகள் நிறைய வைக்கப்பட்டுள்ளன. இங்கே எங்களது ஆசை நாய் நன்கு சொகுசாக வாழ்கிறது என்று அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். போதுமான சூரிய ஒளி மற்றும் காற்று கிடைக்கும் வகையில் வீடு மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த வீடியோவில் தெரிகிறது. தவிர மேலே உள்ள அறையில் இருந்து நாய் கீழே வருவதற்காக வீட்டில் ஸ்லைடும் பொருத்தப்பட்டுள்ளது. செல்லப்பிராணிக்கு இத்தகைய செயலில் ஈடுபடும் இந்த தம்பதியின் வீடியோவை பலருக்கும் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். 

Input & Image courtesy:News18




Tags:    

Similar News