நான் கிறிஸ்துவர் என்னால் தேசியக்கொடியை ஏற்ற முடியாது - அரசுப் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த பள்ளி தலைமை ஆசிரியை

தர்மபுரி அருகே அரசு பள்ளி ஆசிரியை தேசியக்கொடியை ஏற்ற மறுத்தது தொடர்பான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-08-16 10:30 GMT

தர்மபுரி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை தேசிய கொடியை ஏற்ற மறுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே பேடர அள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளில் 282 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி உட்பட 13 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி இந்த ஆண்டு ஓய்வு பெறும் நிலையில் நேற்று 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசியக்கொடியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏற்ற மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதே பள்ளியில் பணிபுரியும் முருகன் என்ற ஒரு ஆசிரியர் தேசிய கொடியை ஏற்றினார். தேசியக்கொடியை ஏற்ற தலைமை ஆசிரியை மறுத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இது குறித்து ஆசிரியை தமிழ்செல்வியிடம் கேட்டபோது 'பேடர அள்ளியில் அரசு உயர்நிலைப் உயர்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக பணிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆண்டுடன் ஓய்வுபெற உள்ளேன்.


நான் கிறிஸ்தவ அமைப்பின் ஒரு பகுதியை சார்ந்துள்ளேன். எங்களது வணக்கம் எங்களைப் படைத்த தெய்வத்துக்கு மட்டுமே .நமது தேசிய கொடிக்கு மரியாதை தருகிறோம் ஆனால் வணங்க மாட்டோம். தேசியக் கொடியை அவமதிக்கவில்லை. மதிக்கிறோம். இந்த பள்ளியில் பணியாற்றிய கடந்த நான்காண்டு காலமாக தேசியக்கொடியை நான் ஏற்றவில்லை. பள்ளி ஆசிரியர்கள்தான் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர் என்றார்.


இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் ,"நடப்பாண்டு முதல் பள்ளியில் தலைமை ஆசிரியர் தான் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என உத்தரவு உள்ளது.


தலைமை ஆசிரியை தேசியக் கொடியை ஏற்ற மறுத்தது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர். அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்ற மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





 



 


Similar News