ஆத்மநிர்பார் திட்டம் : மத்திய அரசின் மெகா திட்டம் - எதற்காக இது?

மத்திய அரசு உ.ள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பிரௌசர்கள் அமைக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது.

Update: 2023-08-10 17:15 GMT

ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கென பிரத்யேக புரௌசர்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புரௌசர்கள் கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் வடிவமைக்க இந்திய தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.


தற்போது உள்ள கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் போன்ற மக்களிடம் மிகவும் பிரபலமாக உள்ள பிரௌசர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் இந்தியாவில் சர்வர் வைத்து, பொதுமக்களின் தகவல்களை பயன்படுத்தினாலும் இணைய பாதுகாப்பு விஷயத்தில் ஒரு வித அச்சம் இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் என்பதால் நாட்டின் பாதுகாப்புக்கு உள்நாட்டு பிரௌசர்களே நல்லதாக இருக்கும் என்று மத்திய அரசு நினைக்கிறது.


அதனால் தான் "ஆத்மநிர்பர்தா" திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பிரௌசர்கள் அமைக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது. இத்திட்டத்தின் படி, கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ், ஓபரா மற்றும் பல்வேறு பிரௌசர்களுக்கு போட்டியிடும் வகையில் புதிய உள்நாட்டு பிரௌசர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆனால் கூகுளின் குரோம் உள்ளிட்ட மற்ற பிரௌசர்களுக்கு போட்டியாக ஒரு பிரௌசரை உருவாக்குவது எளிதானது இல்லை என்பதால் அதற்காக மானியம் தரவும் மத்திய அரசு தயாராக உள்ளது. 3 கோடிக்கும் அதிகமான மானியம் தரவும் தயாராக உள்ளது.இந்த புதிய பிரௌசர் தயாரிப்பை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கண்டிப்பாக கண்காணிக்கும். மேம்படுத்த தேவையான அனைத்து உதவியும் செய்யும்.


இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும் போது, " உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான பாதையில் பயணிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்கு நமது டிஜிட்டல் விதியின் மீது நம்முடைய அரசு தான் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.


நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சேவைகளுக்கு வெளிநாடுகளின் பிரௌசர்களை சார்ந்திருக்க விரும்பவில்லை. நாட்டு மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனவே தான் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக நாம் தேடும் சர்ச் என்ஜின் இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது" என்றார்.


தற்போதைய நிலையில் கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் போன்றவை தங்களுடைய ரூட் ஸ்டோர்களில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ சான்றளிக்கும் ஏஜென்சிகளை (அரசினை) சேர்க்கவில்லை. இந்த புதிய திட்டத்தினை பயன்படுத்தி அவர்களிடம் மத்திய அரசால் பேரம் பேச முடியும்.

இந்தியாவில் கூகுள் குரோம் சுமார் 850 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய இணையச் சந்தையை கவசம் வைத்திருப்பது சாட்சாத் கூகுளே தான். கூகுள் குரோம் 88.47 சதவீதம் இந்தியர்களால் பயன்படுத்தப்படுகிறது. சஃபாரி பிரௌசர் 5.22 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், மைக்ரோசாப்ட் எட்ஜ் 2 சதவீதத்தையும், சாம்சங் இன்டர்நெட் 1.5 சதவீதத்தையும், மொஸில்லா பயர்பாக்ஸ் 1.28 சதவீதத்தையும், மற்றவை 1.53 சதவீதத்தையும் இந்திய சந்தையில் பிடித்திருக்கின்றன.


இந்நிலையில் உள்நாட்டு இண்டர்நெட் பிரௌசர் மேம்படுத்தும் பணிகளை முடித்து 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எப்படியாவது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதற்காக உள்நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பும் விடுத்துள்ளது.


பிரௌசரை உருவாக்குவதில் மற்றும் அதனை சரியான முறையில் செயல்பாட்டிற்கு கொண்டுவர தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது. புதிய புரௌசர்கள் இப்போது உள்ள நவீனமான தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும், இந்திய மொழிகளில் இயங்கும் வகையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

SOURCE :Oneindia.com

Similar News