ஆன்லைனில் 1.4 லட்சத்திற்கு ஷாப்பிங் செய்த ஒன்றரை வயது குழந்தை!

ஆன்லைனில் சுமார் இந்திய மதிப்பில் 1.4 லட்சத்திற்கு ஷாப்பிங் செய்த ஒன்றரை வயது சிறிய குழந்தை.

Update: 2022-02-02 14:11 GMT

பெரும்பாலும் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவற்றை சமாதானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தங்களிடம் உள்ள செல்போன்களை அவர்களிடம் விளையாடுவதற்கு கொடுக்கிறார்கள். ஆரம்பத்தில் இதனை பார்த்த பிறகு குழந்தைகள் அழுவதை நிறுத்தி செல்போனை உபயோகப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் இதுவே விபரீத முடிவுகளை எடுப்பதற்கும் வழிவகுக்கிறது. குழந்தைகள் வைத்திருக்கும் பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பது முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அப்படி செல்போன் கொடுப்பதன் மூலம் குடும்பத்தில் சில பிரச்சினைகள், பெரிய அளவில் கஷ்டங்களை ஏற்படுத்துகிறது.


அந்த வகையில் தற்போது நடக்க தெரியாத ஒன்றரை வயது குழந்தை தற்போது தன்னுடைய அம்மாவை மொபைல்போன் மூலம் சுமார் 1.4 லட்சம் இந்திய மதிப்பில் பொருட்களை ஆர்டர் செய்துள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அமெரிக்காவில் வசித்து வரும் பிரமோத் குமார், அவரது மனைவி மது குமார், தனது 22 மாத குழந்தையான அயன்ஷ் குமார் உடன் சமீபத்தில் நியூஜெர்சியில் உள்ள வீடு ஒன்றிற்கு குடிபெயர்ந்துள்ளனர். புதிதாக கூடிய சென்ற வீட்டில் புதிய சில மரச்சாமான்களை ஆடர் செய்வதற்காக தன்னுடைய ஷாப்பிங் பாக்கில் பல்வேறு பொருட்களை மது ஆடர் செய்வதற்காக சேவ் செய்து வைத்துள்ளார். 


தனது ஷாப்பிங் கார்ட்டில் நிறைய பொருட்களை சேர்த்துக் கொண்டு இருந்த இடையில் போனை வைத்துவிட்டு மது வேறு வேலையை பார்க்க கிளம்பியுள்ளார். அந்த போனில் தன்னுடைய குழந்தை எடுத்ததை தெரியாமல் அவர் வேலையை செய்ய தொடங்கி உள்ளார். பிறகு ஆடர் செய்த பொருள் வீட்டிற்கு வந்த பிறகுதான் அவர்களுக்கு இந்த உண்மை தெரிய வருகிறது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு 2 ஆயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 1.4 லட்சம் ரூபாயாம். 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News