தாய் அன்பை விட உலகில் சிறந்தது இல்லை: நடிகர் மாதவன் வெளியிட்ட வீடியோ!
நடிகர் மாதவன் அவர்கள் கமெண்ட் தெரிவித்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தாய் அன்பு என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று தன்னுடைய அம்மா மகிழ்ச்சி அடையும் தருணத்தில் உலகில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் இருந்தாலும் அதை விட பெரிதாக எண்ண மாட்டார்கள். நீங்கள் அவர்களுக்காக நேரத்தை ஒதுக்கி, சிறிய அன்பளிப்பை கொடுத்தாலும் அவர்கள் ஓராயிரம் முறை உங்களிடம் அந்த பாசத்தை வெளிப் படுத்துவார்கள். அந்த வகையில் தற்பொழுது நடிகர் மாதவன் அவர்கள் கருத்து தெரிவித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறதாம்.
அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம். அது பெரும் இரண்டு நிமிட வீடியோ தான். அதில் ஒரு மகன் தன்னுடைய அம்மாவிற்கு ரூபாய் 8000 மதிப்புள்ள மொபைல் போனை வாங்கி அன்பளிப்பாக கொடுத்துள்ளார். அதை பெற்று அவருடைய தாய் தன் மகன் தனக்கு வாங்கி கொடுத்த மிகப்பெரிய மதிப்புமிக்க பொருளாக கருதி உள்ளம் மகிழ்ந்துள்ளார். மகிழ்ச்சியில் இருவருடைய கண்களும் கலங்குகின்றன. இந்த வீடியோவை பற்றி தன்னுடைய கருத்தையும் நடிகர் மாதவன் பகிர்ந்துள்ளார்.
இன்று இருக்கும் நவீன சூழ்நிலையில் அம்மாவிற்காக நேரம் ஒதுக்காத பலர் இருக்கும் இந்தத் தருனத்தை இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் தாய் அன்பைவிட சிறந்தது வேறு ஒன்றுமில்லை என்பதுபோல் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோக்கு நிறைய பேர் கமெண்ட் செய்துள்ளார்கள்.
Input & Image courtesy: Twitter post