ஆப்கானில் பத்திரிக்கையாளரை கொடூரமான முறையில் தாக்கிய தலிபான்கள் !

ஆப்கனில் தற்பொழுது பத்திரிக்கையாளர்கள் இருவரை மிகவும் கொடூரமான முறையில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி உள்ளார்கள். இது தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.

Update: 2021-09-09 13:51 GMT

தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றி விட்டனர். இப்போதைக்கு ஆப்கானில் தற்காலிகமாக அரசு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. புதிய தலைவர்களையும் அவர்கள் தேர்வு செய்து உள்ளார்கள் இத்தகைய ஒரு சூழ்நிலையில் அங்கு என்னதான் நடக்கின்றது என்பது வெளி உலகத்திற்கு கொண்டு வரும் செயல்களில் அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றார்கள். ஆனால் அவர்கள் செய்யும் முயற்சிக்கு இடையூறாக தலிபான்கள் பல வேலைகளையும் செய்து வருகிறார்கள். 


புதிய ஆட்சியின் போது தலிபான்கள் கூறுகையில், மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தனர். இப்படி அறிவித்துள்ள தலிபான்கள் தற்பொழுது, பத்திரிக்கையாளர்கள் இருவரை அரை நிர்வாணமாக்கி, தாக்குதல் நடத்தியது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தலிபான்களால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் தங்களது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எதிலாட்ரோஸ் செய்தி நிறுவனம் கூறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.  




குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் பெண்கள் போராட்டம் தொடர்பான செய்தியை சேகரிக்கச் சென்ற தங்களது நிறுவன பத்திரிக்கையாளர் மற்றும் வீடியோ எடிட்டரை தலிபான்கள் கடத்திச் சென்று தாக்குல் நடத்தியதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே உண்மைகளை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பத்திரிக்கை துறையினர் மீது தலிபான்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள்.  

Input & image courtesy:ndtv



Tags:    

Similar News