ஆப்கான்: சாமானிய மக்கள் வீதிகளில் சொந்த வீட்டு பொருட்களை விற்கும் அவலம் !
தலிபான்கள் ஆட்சியின்கீழ் ஆப்கானிய மக்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வீதிகளில் விற்கும் அவலநிலை.
ஆப்கானிஸ்தானை தற்போது தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆப்கான் மக்கள் உள்ள மக்களின் நிலை கேள்வி குறிதான். உலக நாடுகளும் தாங்கள் இதுவரை செய்து வந்த உதவியை நிறுத்தி வருவதால் அங்குள்ள மக்கள் பட்டினியாலும், வறுமையிலும் சிக்கித் தவிக்கிறார்கள். இதன் காரணமாக வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை தெருக்களில் கொண்டு வந்து போட்டு விற்பனை செய்து, குழந்தைகளுக்கு உணவு வாங்க வேண்டிய நிலைக்கு காபூல் நகர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அங்குள்ள மக்கள் தங்களுடைய வங்கிக் கணக்குகளும் பணம் எடுக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தலிபான்களுக்கு அஞ்சி வங்கிகள் பூட்டப்பட்டதால், தாங்கள் சேமித்த பணத்தைக்கூட வங்கியிலிருந்து எடுக்க முடியாத நிலைக்கு காபூல் மக்கள் தள்ளப்பட்டனர். காபூல் நகரிலிருந்து பெரிய நிறுவனங்கள் வெளியேறுவதாலும், வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்படுவதாலும், மக்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் குறைந்தபட்ச விலை கூட தற்போது மிகவும் அதிகமாக உள்ளது.
காபூலின் சம்மன் இ ஹசோரி பார்க் பகுதியில்தான் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திய பொருட்களை தற்பொழுது விற்று வருகிறார்கள். இங்கு குறிப்பாக ஃபிரிட்ஜ், LED டிவி உள்ளிட்ட பல விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். ஏதாவது கிடைத்தால் மட்டும் போதும் குழந்தைகளை பட்டினிபோடாமல் சாப்பாடு வழங்கலாம் என்ற எண்ணத்தில் வீட்டுப் பொருட்களை விற்கும்நிலைக்கு ஆப்கன் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
Input & Image courtesy: Aninews