பெருங்குழப்பத்தில் ஆப்கானிஸ்தான், விடுமுறையில் அமெரிக்க அதிபர்- குவியும் விமர்சனங்கள் !

விமர்சனம் இருந்தபோதிலும், பிடென் தனது விடுமுறையை முடிவுக்குக் கொண்டுவரவில்லை.

Update: 2021-08-17 07:39 GMT

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றும் வேளையில், ​​விடுமுறைக்கு சென்றதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறார். ​​ஆப்கானியர்கள் தலிபான் ஆட்சியை விட்டு வெளியேறும் முயற்சியில், ​​காபூல் விமான நிலையத்தில் நடக்கும் குழப்பமான நிகழ்வுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. விமானங்களின் டயர்களில் தொங்கி, பின் கீழே விழுந்து சிலர் மரணமடையும் விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலிபான் படைகள் ஏற்கனவே நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு போஸ்ட்களை கைப்பற்றியதாகக் கூறப்படுவதால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. காபூலை தலிபான்கள் கைப்பற்றும் வேகம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளும் தங்கள் பணியாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன, மேலும் அவர்களை விமான நிலையத்திற்கு அருகில் நகர்த்தத் தொடங்கியுள்ளன.

இதனையடுத்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஊழியர்களையும் தூதரக பணியாளர்களையும் வெளியேற்ற இந்தியா தயாராக உள்ளது

இத்தகைய சூழ்நிலையில், ஜோ பிடென் சமூக ஊடகங்களில் விடுமுறைக்கு சென்றதற்காக கேலி செய்யப்படுகிறார். அவரது திறமையற்ற தன்மைக்காக அவரது அரசியல் எதிரிகளும் அரசியல் விமர்சகர்களும் அவரை கேலி செய்கிறார்கள்.



நாடு நெருக்கடியில் இருக்கும்போது தங்கள் ஜனாதிபதி விடுமுறையை அனுபவிப்பதில் பிஸியாக இருப்பதால் அமெரிக்கர்கள் விரக்தியடைந்துள்ளனர்.




விமர்சனம் இருந்தபோதிலும், பிடென் தனது விடுமுறையை முடிவுக்குக் கொண்டுவரவில்லை.  




Cover Image Courtesy: Twitter/Joe Biden 

Tags:    

Similar News