ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய உத்தரவு: மாணவர்கள் முடி வெட்ட தடை!

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் புதிய உத்தரவால் மாணவர்களிடையே ஏற்பட்ட சலசலப்பு.

Update: 2022-05-01 00:24 GMT

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வந்த நீண்ட கால போரில் தற்போது தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி உள்ளார்கள். அந்தவகையில் அவர்கள் ஆட்சி அமைத்த நாளிலிருந்து பல்வேறு புதிய உத்தரவுகளை மேற்கொண்டு வந்தனர். இதன் காரணமாக பல்வேறு வாக்களித்த மக்கள் தங்களுடைய சொந்த நாடுகளை விட்டு பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்று ஒரு சூழ் நிலையும் காணப்பட்டது. அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தானில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களும் அங்கு உள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய ஒரு சூழ்நிலை உள்ளது. 


இந்த நிலையில், தலீபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதன்படி தற்பொழுது ஹெராத் மாகாணத்தில் உள்ள சலூன் கடைகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள மாணவர்கள் குறிப்பாக ஆடவர்கள் மேற்கத்திய நாடுகளில் உள்ள கலாசாரத்தின் பின்பற்றி விடக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளனர் இதன் காரணமாக தற்போது அவர்கள் முடி வெட்டிக் கொள்ளும் ஒரு நிலைக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். 


அரசு, தனியார் பல்கலை கழகங்களில் பயிலும் மாணவிகள் வகுப்பறையில் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் என்றும் தலீபான்கள் கட்டாயம் என்று கூறி வந்தார்கள் ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் அவர்கள் இருவரிடையேயும் திரை அமைக்கப்பட்டதும் வகுப்பு எடுக்கப்படுகிறது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் இவர்களுடைய இந்த அறிவிப்பு அங்கு ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆண்கள் முழு அளவில் வளர்ந்த தாடி வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பணிநீக்கம் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தனர்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News