பிரதமர் மோடி மீது ஆர்வம் கொண்ட ஜிம்பாவே மாணவர்: காரணம் என்ன?

பிரதமர் மோடியின் மீது ஆர்வம் கொண்டு பாஜகவை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும் ஜிம்பாவை மாணவர்.

Update: 2022-11-22 06:25 GMT

உலகத் தலைவர்களின் பட்டியலில் தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் முன்னிலை வகித்து வருகிறார். மேலும் பல்வேறு நாடுகளில் சிறந்த தலைவர் என்ற பெருமையும் மோடி அவர் பெற்றிருக்கிறார். இந்தியாவை உலக தரத்திற்கு உயர்த்திய பெருமை அவரை சாரும். இந்தியாவில் தொழில்நுட்ப ரீதியாக முன்னிலைப்படுத்தி ஊழல், மோசடி போன்றவற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை சென்றடைய வேண்டும் என்பதில் குறிப்பாக இருக்கிறார்.


மேலும் இதனை பா.ஜ.க தரப்பில் அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும் என்றும் முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் குஜராத்தில் ஆனந்தில் உள்ள கல்லூரி ஒன்றில் உயிரைத் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் படிக்கும் ஆப்பிரிக்க நாடான ஜிம்பாவே சேர்ந்த மாணவர் நீக் காமபாட் பிரதமர் நரேந்திர மோடி தீவிர ரசிகராக இருக்கிறார். இவர் அரசியலில் ஆர்வம் இருப்பதன் காரணமாக பா.ஜ.கவின் கொடியை போர்த்தியபடி வலம் வருகிறார்.


மேலும் பா.ஜ.கவினரிடம் இருந்து தேர்தல் குறித்தும் பிரச்சாரம் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டு அறிந்து வருகிறார். இவருடைய இந்த ஒரு செயல் முப்பெரும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா புதிய உச்சம் எட்டும் என அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார். பா.ஜ.க பிரசாரம் நடக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று பார்வையிட்டு வருகிறார். தமிழகத்தின் இந்தியாவில் இருந்து மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கும் ஒரு சூழ்நிலையில் வெளிநாட்டு மாணவர் இங்கு வந்து ஒரு படிக்கும் சூழ்நிலையில் பிரதமர் ஏற்படுத்துகிறார். ஏனெனில் புதிய கல்விக் கொள்கை என்பதும் இந்திய மாணவர்களுக்கு மட்டுமல்லாது பல்வேறு அயல் நாட்டு மாணவர்களுக்கும் புது உத்வேகத்தை தந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News