சிகரெட் பிடிக்கும் சிவன் பார்வதி - லீலா மணிமேகலையின் அடுத்த சர்ச்சை

இயக்குனர் லீலா மணிமேகலை அடுத்தபடியாக சிவன் பார்வதி வேடத்தில் இருக்கும் இருவர் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-07-07 13:43 GMT

இயக்குனர் லீலா மணிமேகலை அடுத்தபடியாக சிவன் பார்வதி வேடத்தில் இருக்கும் இருவர் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் காளி என்கின்ற ஆவண படத்தின் போஸ்டர் மூலம் சர்ச்சை ஏற்படுத்தினார் இயக்குனர் லீலா மணிமேகலை.

காளி திரைப்படத்தின் போஸ்டரில் காளி வேடமிட்டவர் சிகரெட் பிடிப்பது போன்றும், பின்னணியில் ஓரினச்சேர்க்கையாளர் ஆதரிக்கும் கொடி இருப்பது போன்றும் புகைப்படங்களை வெளியிட்டு அவை சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் உத்தர பிரதேசம், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயக்குனர் லீலா மணிமேகலை மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இது ஒருபுறம் விவகாரத்தை கிளப்பிக் கொண்டிருக்க மறுபுறம் மீண்டும் தனது ட்விட்டர் பதிவில் சிவன், பார்வதி வேடமடைந்த இருவர் புகைப்படம் பிடித்துக் கொண்டே நடப்பது போன்ற காட்சியை பதிவிட்டு உள்ளார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Source - Dinamar

Similar News