லண்டன் யூனிஸ் புயல்: 141 கி.மீ வேகத்தில் காற்றுடன் போராடிய இந்திய பைலட்!

யூனிஸ் புயலுக்கு மத்தியில், பயணிகளை பாதுகாப்பாக தரையிறங்கியதற்காக ஏர் இந்தியா பைலட் அவருக்கு குவியும் பாராட்டுக்கள்.

Update: 2022-02-20 13:18 GMT

கடந்த வெள்ளியன்று யூனிஸ் புயல் இங்கிலாந்தை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் போது, ​​ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்களின் லைவ் ஸ்ட்ரீமிங்கை பிக் ஜெட் TVயில் ஆயிரக் கணக்கானோர் கண்டுகளித்தனர். இதில் பல நாடுகளைச் சேர்ந்த விமானங்களின்  லைவ் ஸ்ட்ரீம்ங்கும் அடங்கும். பலத்த காற்றுக்கு மத்தியில், விமானிகள் தங்கள் விமானங்களை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்க நிர்வகிப்பதைக் காண முடிந்தது. இப்படி இறங்கும் விமானங்களில் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


அவர்களில் ஒருவர் ஏர் இந்தியா விமானி, மோசமான வானிலைக்கு மத்தியில் போயிங்  787 ட்ரீம்லைனரை சாமர்த்தியமாக கையாண்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, தற்போது அந்த விமானத்தை இயக்கிய பைலட் அவர்கள் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். ஏர் இந்தியா விமானத்தை விமானி சுமூகமாக தரையிறக்குவதை வீடியோவில் காணலாம். "ஏர் இந்தியா விமானம் லண்டனில் நடந்து கொண்டிருக்கும் யூனிஸ் புயலுக்கு நடுவில் பத்திரமாக தரையிறங்கியது. திறமையான AI பைலட்டுக்கு அதிக பாராட்டுகள்" என்று புதுச்சேரியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். 


தற்பொழுது ஜெர்மனி, போலந்து, ஐரிஷ் குடியரசு, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை யூனிஸ் புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. பலத்த காற்றினால் மரங்கள் மற்றும் கூரைகள் சாய்ந்தன மற்றும் மில்லியன் கணக்கான வீடுகளில் மின்சார சேவைகள் தடைபட்டுள்ளன. BBC அறிக்கையின்படி , வெள்ளிக்கிழமை மணிக்கு 120 மைல் வேகத்தில் காற்று வீசியது. 

Input & Image courtesy:  Indian Express

Tags:    

Similar News