செவ்வாய் கிரகத்தில் ஏலியன் உள்ளதா? வீடியோவில் பதிவான காட்சிகள்!

செவ்வாய் கிரகத்தில் ஏலியன் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ.

Update: 2022-02-10 14:33 GMT

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகமாக இருக்குமா? என்பது தொடர்பாக நாசா விஞ்ஞானிகள் தற்போது வரை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் நாசாவில் கற்பனைக்கு எட்டாத பல்வேறு அதிசயங்களையும் அங்கு கண்டு பிடித்து வருகிறார்கள். சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சான்றுகளை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அந்த வகையில் தற்போது செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே ஏலியன் போன்ற உயிரினங்கள் வாழ்கிறதா? என்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பல்வேறு மக்களின் இருப்பதாக பல்வேறு கட்டுக் கதைகளையும் அவிழ்த்து விட்டு வருகிறார்கள். 


சில மாதங்களுக்கு முன்பு நாசா வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பயன்படுத்தி ஸ்காட் சி வேரிங் என்ற நபர் ஏலியன் இருப்பதாக தற்போது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார். இவருடைய யூடியூப் சேனலில் நாசா வெளியிட்டு உள்ள புகைப்படத்தை சுட்டிக்காட்டு அங்கு ஒருவர் படுத்து இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருப்பது தெரிய வருகிறது என்று கூறினார். அதற்கு அடுத்து அது நிச்சயம் ஏலியன் ஆகத்தான் இருக்க முடியும். ஆனால் இவற்றை தற்பொழுது முற்றிலுமாக நாசா மறுத்துள்ளது. அவ்வப்பொழுது விண்வெளியில் பறக்கும் தட்டுக்கள் மற்றும் வானில் மிதக்கும் பொருட்களை வைத்து மக்கள் பல்வேறு கற்பனைகளை எழுப்பி கொள்கிறார்கள். 

Full View



இதுகுறித்து தற்பொழுது தான் நாசா ஆய்வு செய்து வருகின்றது. எனவே மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என்பது தொடர்பான முடிவுகள் பின்னர் தான் வெளியிடப்படும் என்று நாசா கூறியுள்ளது. அதுவரை மக்கள் இது போன்ற செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம், அச்சப்படவோ தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. 

Input & Image courtesy:News

Tags:    

Similar News