அமெரிக்க விமானங்களில் ஊஞ்சலாடும் தலிபான்கள் ! சீன அதிகாரி வெளியிட்ட வீடியோ !

அமெரிக்க விமானங்களில் தற்பொழுது தலிபான்கள் ஊஞ்சல் விளையாடும் வீடியோ ஒன்றை சீன அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.

Update: 2021-09-12 13:45 GMT

ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ள தலிபான்கள் குறித்த வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. குறிப்பாக அவர்கள் செய்யும் வித்தியாசமான செயல்களால், மற்றவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் விதத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக ஒருமுறை அவர்கள் ரோந்து செல்லும் பணியின்போது ஆப்கானிய செய்தியாளர் ஒருவரை விமானத்திலிருந்து கட்டித் தொங்கவிட்டு சென்று வீடியோ பலரையும் மனதளவில் காயப்படுத்தி உள்ளது. எனவே ஆப்கானிய மக்கள் தலிபான்கள் ஆட்சியில் தங்கள் வாழ விருப்பம் இல்லாத காரணத்தினால் வேறு நாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.


தாலிபான்களின் ஆட்சிப்பிடியில் சிக்காமல் தப்பி பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் ஆப்கான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளிநாட்டிற்கு தப்பி சென்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது செப்டம்பர் 9 அன்று, சீன அரசு அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் குறிப்பாக அமெரிக்க படைகள் முழுவதுமாக அங்கிருந்து வெளியேறினார். அமெரிக்க படைகள் விட்டுச் சென்ற விமானங்கள் ஆப்கானிஸ்தானில் தான் இன்னும் உள்ளன.  



அத்தகைய விமானங்களில் தலிபான்கள் தற்பொழுது ஊஞ்சல் விளையாடி வருகிறார்கள். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில், "பேரரசுகளின் போர் இயந்திரங்களை தாலிபான்கள் ஊஞ்சலாக பயன்படுத்துகின்றனர்" என்று வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார்.

Input & image courtesy:News18


Tags:    

Similar News