யாருடைய தூண்டுதல் இது? அனுமதி வாங்காமல் பள்ளியில் தொழுகை நடத்தும் மாணவிகள்! தடுமாறும் தலைமையாசிரியர்!
Amidst hijab row, video of students offering namaz goes viral;
கர்நாடக மாநிலம், இல்கல் நகரில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் ஹிஜாப் அணிந்து 6 மாணவிகள் தொழுகை நடத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆதாரங்களின்படி, ஹிஜாப் அணிந்து, 6 ஆம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகள் பள்ளி வளாகத்தில் மதிய உணவு நேரத்தில் தொழுகை நடத்துகிறார்கள். இந்த மாணவிகள் பள்ளி வளாகத்தில் பிரார்த்தனை செய்வது இதுவே முதல் முறையாகும்.
சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் இயங்கும் மௌலானா ஆசாத் ஆங்கில வழிப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானதை அடுத்து இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, பொதுக்கல்வித் துறை (டிபிஐ) அதிகாரிகள் பள்ளிக்கு சென்று முதற்கட்ட விசாரணை நடத்தினர். பள்ளியில் மதிய உணவு நேரத்தில் மாணவர்கள் தொழுகை நடத்துவது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி தலைமை ஆசிரியர் எச்.ஒய்.கர்கூர், "பள்ளி வளாகத்திற்குள் தொழுகை நடத்தக் கூடாது என்று மாணவர்களுக்கு முன்பே எச்சரித்திருந்தேன். இப்பள்ளியில் 232 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மதிய உணவு நேரத்தில் மீதமுள்ள மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் உணவு பரிமாறும் போது மாணவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
ஆறு மாணவர்களும் எந்த அனுமதியையும் பெறவில்லை அல்லது பள்ளி வளாகத்திற்குள் தொழுகை நடத்துவது பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் பள்ளியில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வோம்," என்றார் தலைமை ஆசிரியர் கார்கூர்.
இதுகுறித்து டிபிஐ துணை இயக்குநர் ஸ்ரீஷைல் பிராதார் கூறுகையில், "பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் பிரார்த்தனை செய்வது என் கவனத்துக்கு வந்தது. இது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு இல்கல் தொகுதி கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார்.