ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வரும் ஆனந்த் மகேந்திரா கொடுத்த தொழில் அட்வைஸ் !

ஆனந்த் மகேந்திரா அவர்கள் கொடுத்த தொழிலுக்கான அட்வைஸ் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது.;

Update: 2021-10-16 12:53 GMT
ட்விட்டரில் ட்ரெண்டாக்கி  வரும் ஆனந்த் மகேந்திரா கொடுத்த தொழில் அட்வைஸ் !

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவர்கள் டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இப்போது அவருக்கு பிடித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள ஆனந்த் மகேந்திரா, அதன்மூலம் பிஸ்னஸ் செய்பவர்களுக்கு சூப்பரான அட்வைஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார். ஒரு ட்விட்டர் யூசர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நாய்க்குட்டியின் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், மரக்கதவுக்கு பின்னால் இருக்கும் நாய்க்குட்டி, கண்ணாடி இல்லாமல் வெறும் சட்டகமாக இருந்தாலும் அதன்வழியே வெளியே வர மறுக்கிறது. கண்ணாடி இருக்கிறதா? இல்லையா? என்று கால்களால் தொட்டுப் பார்க்க முயற்சி செய்யும் அந்த நாய்க்குட்டி, அதன் உரிமையாளர் கதவை திறந்த பின்னரே அந்த வழியாக வெளியேறும். 


இந்த வீடியோவை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மகேந்திரா இதுபற்றி கூறுகையில், ஒரு பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதை இதை விட விளக்குவதற்கு சிறந்த உதாரணம் இருக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய தொழில் உலகில் சுதந்திரமாக இருக்க, எதற்கு விடைகொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்தக் கருத்தும், அந்த வீடியோவும் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மற்றொருவர் தொழிலுக்கு மட்டுமல்ல குடும்ப வாழ்க்கை, பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் இது பொருந்தும் எனக் கூறியுள்ளார். 



ஒரே இடத்தில் நிலைபெற்று விட்டால், அதில் இருந்து வெளியேறக்கூட முயற்சிக்காமல் நம்பிய ஒன்று இருப்பதாக நினைத்து அங்கேயே தேக்கமடைந்துவிடுவோம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, நாம் எங்கிருக்கிறோம் என்பதை உணர்த்தும் வீடியோவாக இது இருப்பதாக பல்வேறு நபர்கள் கருத்துக்களை கூறியுள்ளார். ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த இந்த டிவிட்டர் மற்றவர்களும் தங்களது பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.  

Input & Image courtesy: Indian Express



Tags:    

Similar News