'கர்நாடகாவை பார்த்து கத்துக்கோங்க குண்டு வெடிப்பு சம்பவத்தை எப்படி கையாளும் என' - தி.மு.க அரசிற்கு வகுப்பெடுத்த அண்ணாமலை

குண்டுவெடிப்பு சம்பவம் என்றால் அதனை இப்படித்தான் கையாள வேண்டும் என கர்நாடக டி.ஜி.பி-யின் ட்விட்டர் பதிவை சுட்டிக்காட்டி அண்ணாமலை பாராட்டியுள்ளார்.;

Update: 2022-11-20 14:24 GMT

குண்டுவெடிப்பு சம்பவம் என்றால் அதனை இப்படித்தான் கையாள வேண்டும் என கர்நாடக டி.ஜி.பி-யின் ட்விட்டர் பதிவை சுட்டிக்காட்டி அண்ணாமலை பாராட்டியுள்ளார்.

கர்நாடக மாநில மங்களூரில் இன்று அதிகாலை ஆட்டோவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் ஆட்டோ விபத்து திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டது. இதனை கர்நாடக டி.ஜி.பி பிரவீன் சூட் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார்.

இது குறித்து ட்விட்டரில் இதனை மேற்கோள் காட்டி பதிவிட்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குண்டு வெடிப்பு சம்பவங்களை கையாள்வதற்கு இது சிறந்த உதாரணம் என பாராட்டி உள்ளார். இதனையடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கோவையை தாக்குதல் குண்டு வெடிப்பு சம்பவத்தை எப்படி கையாளக் கூடாது என்பது தி.மு.க அரசின் செயல்பாடுகள் எடுத்துக்காட்டாக விளங்கியதாகவும் தெரிவித்தார்.



Source - News 18 Tamil Nadu

Similar News