மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய நீர்வளத் துறை வெளியிட்ட வீடியோ !

மக்களுக்கு நீர் வளத்தின் முக்கியத்துவத்தை புரிய வைக்கும் நோக்கில் மத்திய நீர்வளத் துறை வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2021-09-08 13:57 GMT

நிலத்தடி நீர் மட்டம் தற்பொழுது மிகவும் குறைந்து கொண்டு வருகின்றது. குறிப்பாக அனைவரது இல்லங்களிலும் மோட்டார் வந்தவுடன் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலுமாக வற்றி விட்டது. இது குறித்து அரசு, மக்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் தற்போது, நீர்வளத் துறை சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ போன்ற சமூக வலைத்தளங்களை தற்போது வைரல் ஆகி வருகின்றது.  தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை சார்பில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாமல், அருகாமையில் இருக்கும் கிராமத்துக்குள் நுழையும் யானை ஒன்று அங்கிருக்கும் அடி பம்ப்பில் தண்ணீரை அடித்துக் குடிக்கிறது.  


குறிப்பாக சுமார் 26 நொடிகள் வரை இருக்கும் அந்த வீடியோவில் தாகத்தை போக்க, அவ்வாறு செய்துள்ளது. இந்த வீடியோவுக்கு கேப்சனிட்டுள்ள மத்திய நீர்வளத்துறை, ஒரு சொட்டு நீர் எவ்வளவு முக்கியம் என்பதை யானை அறிந்திருக்கிறது. மனிதர்கள் ஏன் இதனைப் புரிந்து தண்ணீரை சேமிக்கக்கூடாது? தண்ணீரை வீணாக செலவு செய்வதை தவிர்க்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது. 




இந்த வீடியோ பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை கூறுகையில், தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தும் அருமையான விழிப்புணர்வு வீடியோ எனத் தெரிவித்துள்ளனர். இந்திய வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டேவும் இந்த வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தண்ணீரையும், வினவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார். 

Input & image courtesy: Twitter

 


Tags:    

Similar News