பாகுபலி வாழைத்தார்: ஆர்வத்துடன் செல்பி எடுக்கும் கிராம மக்கள்!
பாகுபலி வாழைத்தார் என்று அழைக்கப்படும் ஆள் உயர வாழைத்தார் உடன் கிராம மக்கள் செல்பி போட்டோ சமூக வலைதளங்களில் வைரல்.
அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் பழங்களில் வாழைப்பழம் மிகவும் எளிதான ஒன்றாக அறியப்படுகிறது. குறிப்பாக கடைகளில் அல்லது வெளி இடங்களில் தொங்க விடப்பட்டிருக்கிறது பல சுமார் இரண்டு அல்லது மூன்று அடி உயரத்திற்கு தான் இருக்கும். சாதாரணமாகவே விவசாயிகளின் விளை நிலத்திலிருந்து விளைவிக்கப்படும் வாழைத்தார் என்பது இரண்டு மூன்று அடி உயரம் தான் இருக்குமாம். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வாழைத்தாரை உயரம் சுமார் 7 அடி. அதாவது குறிப்பாக ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கும் இந்த வாழைத்தார் தான் இப்போது இருக்கும் ட்ரெண்டிங்.
அந்த வகையில் தற்பொழுது ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கோதபள்ளி மண்டலத்தில் உள்ள வகாடிப்பா என்று கிராமத்தில் விளைந்துள்ள வாழைத்தார் நம்மை ஆச்சரியப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் என்பவரது தோட்டத்தில் அம்ரிதா என்ற வகையைச் சேர்ந்த வாழை பயிரிடப்பட்டிருந்தது. அதில் ஒரு மரத்தில் சுமார் 7 அடி உயரம் கொண்ட வாழைத்தார் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது சுமார் 60 கிலோ எடை கொண்ட இந்த தார் குறித்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரல் ஆகி வருகிறது.
ஒரே தாரில் 140 பழங்களை கொண்டுள்ள இந்த தாருக்கு உள்ளூர் மக்கள் பாகுபலி தார் என்று பெயர் வைத்துள்ளனர். இது இதைப் பற்றிய செய்திகள் கிராமம் முழுவதும் வைரலாக அங்கு உளள இளைஞர்கள் பலர் இந்த வாழைத்தார் உடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் இது பற்றி செய்திகளை தெரிவித்துள்ளார்கள். மேலும் சுதர்சன் என்பவரிடம் இந்த வாழைத்தாரை பயிரிட்ட நீங்கள் என்ன பயன்படுத்தினீர்கள்? எப்படி வளர்க்க வேண்டும்? என்பது தொடர்பாக பல்வேறு நபர்கள் கேள்வி எழுப்பியதாகவும் அவர் ஆச்சரியத்துடன் தெரிவித்தார். இயற்கை முறையில் இயற்கை உரங்களை பயன்படுத்தி வளர்த்தால் நிச்சயம் இதுபோன்று பலன் கிடைக்கும் என்று அவர் அறிவுரை கூறியுள்ளார்.
Input & Image courtesy:News 18