ஆன்மீக சுற்றுலாவுக்கு உதவும் வந்தே பாரத் விரைவு ரயில்: என்ன ஸ்பெஷல் தெரியுமா?

செகந்திராபாத் - திருப்பதி இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில்.

Update: 2023-04-08 02:21 GMT

இந்திய ரயில்வே, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை விரைவில் தொடங்க உள்ளது. செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 15 ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற கோயில் நகரமான திருப்பதி மற்றும் செகந்திராபாத்தை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 8 முதல் தொடங்கப்பட உள்ளது.


இந்த வந்தே பாரத் ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் திருப்பதி மற்றும் செகந்திராபாத் இடையே இயக்கப்படும் என தகவல்கள் உள்ளது. வந்தே பாரத் அதிவிரைவு ரயில், இணைப்பை மேம்படுத்தி, வசதியான பயணத்திற்கு வழிவகுக்கும் பெருமைமிக்கது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். செகந்திராபாத்- திருப்பதி இடையே வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைப்பது குறித்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டியின் ட்வீட்டை பகிர்ந்து பிரதமர் தன்னுடைய பதிலை மிக சிறப்பாக அளித்து இருக்கிறார்.


குறிப்பாக இது பற்றி அவர் கூறுகையில், "வந்தே பாரத் அதிவிரைவு ரயில் பெருமைமிக்க , வசதியான பயணத்தையும், இணைப்பையும் அளிப்பதாகும். செகந்திராபாத் - திருப்பதி இடையேயான இந்த ரயில் சுற்றுலாவுக்கு , குறிப்பாக ஆன்மீக சுற்றுலாவுக்கு பயனளிக்கும். இது பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும். இதன் மூலம் பல்வேறு நாட்டு மக்கள் பயனடைய இருக்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News