சிறுமியை காப்பாற்ற ஓடும் ரயில் முன் பாய்ந்த இளைஞன்!
சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஓடும் ரயில் முன் பாய்ந்த இளைஞன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.;
உயிருக்கு ஆபத்தாக இருக்கும் ஒரு சூழ்நிலையில் அந்த உயிரை காக்கும் ஒவ்வொருவரும் கடவுளாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆபத்து நடக்கும் இடத்தில் தக்க சமயத்தில் ஒருவர் வந்து உதவி செய்து பிற உயிர்களைக் காப்பாற்றும் ஒவ்வொருவரும் நம் நாட்டின் ஹீரோக்கள் தான். அந்த பகுதியில் தற்போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது எதிரில் ரயில் வருவதை அறிந்த சிறுமி பயத்தில் தண்டவாளத்தில் இடையில் பதட்டத்தில் விழுகிறாள். சிறுமியை உடனடியாக காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் இளைஞரொருவர் ரெயில் முன் பாய்ந்தார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.
கடந்த பிப்ரவரி 5ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பர்கேடி பகுதியில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் இருந்து திரும்பிய தச்சர் முகமது மெஹபூப் இந்த இளைஞர் தண்டவாளத்தில் திரும்பி கீழே விழுந்தவுடன் அவர் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அப்படிப்பட்ட உயிருக்கு ஆபத்தான தருணங்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அல்லது சாமானிய மனிதர்களில் யாரோ ஒருவர் அந்த குறிப்பிட்ட நபரை துணிவுடன் காப்பாற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்கள். இந்த வீடியோ நான் படும் இடங்கள் இருந்தாலும் ஆனால் அது சொல்லும் விஷயங்கள் ஏராளம். தன் உயிரைப் பணயம் வைத்த சிறுமியின் உயிரைக் காக்கும் துணிந்த அந்த நபரின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
குறிப்பாக அந்த சிறுமி சிரித்து தலையை தூக்கி இருந்தால் கூட ரயிலில் உயிரை மாய்ந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும். ஏனெனில் பயத்திலோ, பதற்றத்திலோ சிறுமி தலையை தூக்கினால் பெரும் அசம்பாவிதம் நேர்ந்திருக்கும். இதுபற்றி அந்த இளைஞரிடம் கேட்கையில், "ஒரு மாதத்திற்கு முன்பு இதே இடத்தில் ஒரு நெருங்கிய நண்பரின் தாயார் ரயிலில் அடிபட்டு இறந்தார். நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிறுமி ஆபத்தில் இருப்பதைப் பார்த்ததும், நான் உடனடியாக செயல்பட்டேன்" என்று அவர் கூறினார்.
Input & Image courtesy:News 18