கர்நாடகாவில் ஏற்படும் அடுத்த சர்ச்சை: தனியார் பள்ளியில் பைபிள் கட்டாயம்!
தனியார் நடத்தும் பள்ளியில் குழந்தைகளுக்கு பைபிள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடாகாவில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் எப்பொழுதும் பள்ளிக்கல்வித்துறை இருந்து கொண்டே வருகின்றது. கடந்த சில மாதங்களாகவே ஜிகாத் அணிந்து கொண்டு பள்ளிக்கு வருவது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளையும் பள்ளி நிர்வாகம் எதிர்கொண்டு வருகிறது. மத உடைகளை பள்ளிகளில் அனுமதிப்பது கிடையாது என்பதையும் பல்வேறு நபர்களின் கொள்கையாகவும் உள்ளது. அனைவரும் ஒற்றுமை என்பதை உணர்த்தும் விதமாக பள்ளி சீருடைகளை அனைவரும் அணிந்து தான் பள்ளிக்கு வருவதையும் அங்குள்ள அரசாங்கம் ஊக்குவிக்கிறது. அந்த வகையில் தற்போது பள்ளிகளில் பைபிள் எடுத்து வருவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கான முன் அனுமதியை மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே பள்ளி நிர்வாகம் ஏற்கனவே மாணவர்களின் பெற்றோர்களிடம் இதற்கான அனுமதியை பெற்றாக இத்தகைய பைபிளை எடுத்து வருவதாகவும் பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் தனியார் பள்ளிகளில் நடக்கும் இத்தகைய செயல்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
பள்ளியின் இந்த உத்தரவுக்கு வலதுசாரி, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. தனியார் நடத்தும் இதக்கை பள்ளிகளில் இந்த கொள்கையை கடைபிடிப்பது மற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக அமையலாம் என்றும் கர்நாடகாவின் பள்ளிக்கல்வித்துறைக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும் கர்நாடகா கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Input & Image courtesy: News 18