பிரதமர் ஆட்சியில் தமிழ்நாட்டில் வளர்ச்சியை பாதயாத்திரை மூலம் அறிவார் - அண்ணாமலை

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் தமிழகத்தின் வளர்ச்சியே பாதையாத்திரை பயணம் மூலம் ராகுல் காந்தி நேரில் அறிவார் என்று அண்ணாமலை பேட்டி.

Update: 2022-09-09 04:34 GMT

பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் இல்ல திருமண விழா நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்தது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார். அதன் நோக்கம் இந்தியாவை ஒற்றுமையாக இணைப்பதற்கு என்று கூறுகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் இந்தியா முழுமையாக இணைந்துள்ளது என்பதையும், நாடு பெற்றுள்ள வளர்ச்சியையும் பாதயாத்திரை செல்லும் பொழுது ராகுல் காந்தியை நேரில் அறிவார் என்று கூறினார்.


Source: Twitter screen shot 

காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்றனர். ஆனால் இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது என்ன? இதுதான் காங்கிரஸின் நிலைமை. அவர்கள் பேச்சு வேறு, செயல் வேறு. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மிகப்பெரிய போட்டி போல் கபட நாடகம் நடத்தினாலும் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து தான் தலைவர் வருவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்யும் வாக்காளர் பட்டியல் பற்றி யாருக்கும் தெரியாது.


காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியை ஏற்க பாதயாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸின் காங்கிரஸ் கட்சிகளின் தலைவராக வருவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாகவே இருக்கலாம். அதே நேரத்தில் அதைவிட நல்லது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 450 இடங்களிலும் வெற்றி பெற்று பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Indian Express

Tags:    

Similar News