தஞ்சாவூரில் தேர் விபத்து யார் உண்மையில் காரணம்? அண்ணாமலை வெளியிட்ட பகீர் வீடியோ!
தஞ்சாவூரில் நடைபெற்ற தேர் விபத்து சம்பவம் குறித்த உண்மையான பின்னணி என்ன? பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் ட்விட் பதிவு.;
சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற தேர் விழாவின்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்சார கம்பி மீது உராய்வு காரணமாக தேர் தீப் பிடித்து எரிந்தது. மேலும் இதன் காரணமாக அப்பாவி மகளான 11 பக்தர்கள் மற்றும் தேரை இழுத்துச் சென்றவர்கள் என அனைவரும் உயிரிழந்து சம்பவம் வருத்தத்திற்குரியது ஆனால் இந்த சம்பவத்தை குறித்து, இதில் யார் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வார்? என்பது தற்போது வரை கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் கருத்துப்படி தற்போது இதற்கான விடை கிடைத்துள்ளது.
தேர் வடம் பிடித்து இழுத்து சென்ற பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் சாலை உயர்த்தப்பட்டு புது தார் சாலை போடப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த தேர் ரத நிகழ்ச்சியில் எந்த ஒரு விபத்தும் ஏற்படவில்லை. காரணம் சாலை மிகவும் தாழ்வாக இருந்தது மேலும் மேலே செல்கின்ற மின்சார கம்பிகள் தேர் உயர அளவிற்கு மேல் தான் இருந்து வந்துள்ளது. ஆனால் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட சாலை உயர்வு காரணமாக மின்சார கம்பிகள் தேரின் உயரத்தை விட தாழ்வான பகுதியில் உள்ளது.
மேலும் மோத பட்டு இரண்டு நிமிடங்களுக்குப் பிறகுதான் மின்சார நிறுத்தம் ஏற்பட்டது. மேலும் உயர் ரக கம்பிகள் பயன்படுத்தப்படவில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு. மேலும் அங்கு சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் இதுபற்றி கூறுகையில் காலை உயர்த்தப்பட்ட பிறகு தேர் வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய தவறிவிட்டார்கள்? மேலும் கம்பிகளை கண்காணிப்பது குறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். இதுதொடர்பான தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள பா.ஜ.க மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் கூறுகையில், "பிரச்சினையிலிருந்து பிரச்சினைக்கு நகரும் இந்தக் காலத்திலும், சமீபத்தில் தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 அப்பாவிகள் நகர்த்தப்பட வேண்டிய விஷயமல்ல. பொறுப்புக்கூறல் சரி செய்யப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகள் சுதந்திரமாக இருக்கக்கூடாது. எல்லா அப்பாவி ஆன்மாக்களுக்கும் நாம் செய்யக்கூடிய குறைந்தபட்சம் அதுதான்" என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
Input & Image courtesy: Twitter Source